தீராத பண பிரச்சனையை தீர்த்து நிம்மதி அளிக்கும் வாஸ்து சாஸ்திரம்..!!!
வாஸ்து சாஸ்திரத்தில், பல பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கூறப்பட்டுள்ளது. இன்று, குறிப்பாக பணப்பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும் முக்கிய நான்கு வழிகளை அறிந்து கொள்ளலாம்.
முதலாவதாக, வீட்டின் கூரையில் குப்பை சேர அனுமதிக்க வேண்டாம். வாஸ்து ரீதியாக, வீட்டின் கூரையில் குப்பை சேர்ந்தால், பொருளாதார சிக்கல் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இது உளவியல் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.
இரண்டாவதாக, உங்களிடம் செல்வம் சேர வேண்டும் என விரும்பினால், பணம் வைக்கும் உங்கள் அலமாரி அல்லது லாக்கர் சரியான திசையை நோக்கி வைத்திருப்பது அவசியம். அலமாரி அல்லது லாக்கரில் பணத்தை வைக்கும்போது, லாக்கரின் கதவு கிழக்கு நோக்கி திறக்கும் படி இருக்க வேண்டும். மேலும் பணம் வைக்கும் இடத்தை தூய்மை வைத்திருக்க வேண்டும். அப்போது தான் பணம் சேரும். அசுத்தமான இடத்தில் லட்சுமி வாசம் செய்ய மாட்டாள்.
மூன்றாவதாக, உங்கள் வீட்டு அலங்காரத்திற்காக நீர் நிரப்பிய பொருள் ஏதேனும் வைத்திருந்தால், அதை எப்போதும் வடக்கே வைத்திருங்கள். அதே நேரத்தில் நீர் கசிவு ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வடக்கு திசை குபேரரின் திசையாகக் கருதப்படுகிறது. எனவே தண்ணீரை இந்த திசையில் வைத்திருப்பது செல்வத்தை பெருக்கும். நிதி பிரச்சனை தீரும்
நான்காவதாக, எந்தவொரு நீர் தொட்டியிலிருந்தும், அல்லது குழாய்களில் இருந்தும் தண்ணீர் கசியாமல் கவனமாக இருங்கள். வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டிலுள்ள தண்ணீர் விரயமானால், செல்வம் தங்காமல் விரயம் ஆகும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. தண்ணீர் தொட்டி, டாங்க், குழாய் ஆகியவை சேதமடைந்தால், உடனடியாக அதை சரிசெய்யவும்.