அசோக் செல்வன் to ரெடின் கிங்ஸ்லி-2023ல் திருமணம் செய்து கொண்ட கோலிவுட் தம்பதிகள்!

Thu, 14 Dec 2023-6:37 pm,

இந்த ஆண்டு, பல பிரபலங்களுக்கு திருமணம் நடைப்பெற்றது. இதில், பல ரசிகர்களுக்கே சர்ப்ரைஸாகத்தான் இருந்தது. திரை பிரலங்கள் திருமணம் செய்து கொண்டதை, பலர் அவர்கள் வீட்டு உறவினர்கள் திருமணம் செய்து கொண்டது போலவே உணர்ந்து மகிழ்ந்தனர். அப்படி, ரசிகர்களை மகிழ்ச்சியிலும் இன்ப அதிர்ச்சியிலும் ஆழ்த்திய திருமணங்கள் எவை தெரியுமா?

கில்லி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர், ஆஷிஷ் வித்யாத்ரி. இவர், தமிழ் படங்கள் பலவற்றில் வில்லனாக நடித்திருக்கிறார். 61 வயதாகும் ஆஷிஷ் வித்யாத்ரி, இந்த ஆண்டின் மே மாதம் ரூபாலி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டனார். இந்த திருமணம், இந்திய அளவில் பெரிதாக பேசப்பட்டது. 

ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயர் கடந்த நவம்பர் மாதம் தனது காதலர் ரோகித் மேனனை கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் பெரிய அளவில் திருவனந்தபுரத்தில் நடைப்பெற்றது. 

மலையாளத்தில் இருந்து தமிழ் திரையுலகில் நடிக்க வந்து, ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தவர், அமலா பால். இவர், ஜெகத் தேசாய் என்பவரை கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். 

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை நாயகனான கவின், பல படங்களில் கமிட் ஆகி பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் தனது நீண்ட நாள் காதலி மோனிகாவை கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொண்டார். 

கடந்த செப்டம்பர் மாதம் அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் திருமணம் நடைப்பெற்றது. இது, ரசிகர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சி கொடுத்த திருமணமாக இருந்தது. இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர் என்பதும், அதை வெளியில் தெரியாமல் காட்டிக்கொண்டனர் என்பதும் திருமணத்திற்கு பின்னர்தான் அனைவருக்கும் தெரிய வந்தது. 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருப்பவர், ரெடின் கிங்ஸ்லி. இவர், சீரியல் நடிகையான சங்கீதாவை இம்மாதம் 10ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண நிகழ்வில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link