சரியாக தூங்கவில்லை என்றால் இதய நோய் பாதிப்பு? மருத்துவர்கள் கூறுவது என்ன?
ஒருவரின் சரியான தூக்கம் மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாகும, தூக்கமின்மை மாரடைப்பு போன்ற பல்வேறு இதய நோய்களை ஏற்படுத்துகிறது.
தூக்கம் ஆரோக்கியமான மூளை செயல்பாடு மற்றும் பசியின்மை மற்றும் ரத்த சர்க்கரை போன்ற நமது வளர்சிதை மாற்றத்தின் முக்கிய அம்சங்களை செயல்பட உதவுகிறது.
நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலான மக்கள் இதய நோயினால் தான் இறந்திருக்கின்றனர், இதற்கு காரணம் அவர்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே என்று கூறப்படுகிறது.
கடந்த 2019ல் 17.9 மில்லியன் மக்கள் கார்டியோ வாஸ்குலார் நோயின் காரணமாக இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
தூக்கமின்மையை உடலில் ஏற்படும் பல பாதிப்புகளில் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்றவையும் அடங்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.