PM Awas yojana லட்சக்கணக்கான மக்களுக்கு பிரதமர் மோடி நாளை `காசோலை` வழங்குவார்

Tue, 19 Jan 2021-8:18 pm,

Pmay என்றால் என்ன? 

அனைவருக்கும் வீடு திட்டமானது நகர்ப்புறங்களில் 17.06.2015 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த இலக்கின் கீழ் கடனுடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் வழங்கப்படுகிறது.  பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அதாவது ஜனவரி 20 ஆம் தேதி ’பிரதமர் அவாஸ் திட்டத்தின்’ கீழ் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு நிதி உதவி வழங்குவார்.  

வீடுகள் வாங்கவும் / கட்டுமானத்திற்காகவும் வாங்கும் வீட்டுக் கடன்கள் மீது வட்டி மானியம் வழங்கப்படும் 

Pmay திட்டத்தின் பயனாளிகள் யார்?  

நடுத்தர வருவாய் பிரிவினர் (MIG) இந்தத் திட்டத்தின் கீழ் பயனடையலாம். 

குடும்பத்தில் கணவன், மனைவி, திருமணமாகாத மகன்கள் மற்றும் /அல்லது திருமணமாகாத மகள்கள் உள்ளடங்குவார்கள். 18 வயதுக்கு மேற்பட்ட சம்பாதிக்கும் நபர் (திருமண நிலை எதுவாக இருப்பினும்) தனிப்பட்ட வீட்டிற்காக இந்த திட்டத்தினால் பயனடையலாம்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு யார் தகுதியானவர்? 

வருமானத்தின் அடிப்படையில் பின்வரும் நபர்கள் மற்றும் குடும்பங்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள்: 

பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு (EWS) – ரூ. 3 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்கள். 

குறைந்த வருமான வகை (LIG) – ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் மற்றும் ரூ. 6 லட்சம் இவற்றுக்கிடையில் உள்ள குடும்பங்கள். 

நடுத்தர வருமான வகை I (MIG I) – ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சம் மற்றும் ரூ. 12 லட்சம் இவற்றுக்கிடையில் உள்ள குடும்பங்கள். 

பெண்கள் EWS மற்றும் LIG வகைகளைச் சேர்ந்தவர்கள், இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள்

 

இட ஒதுக்கீட்டின்படி, பட்டியல் ஆதிதிராவிடர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு (OBC) பிரிவைச் சேர்ந்தவர்கள் பலனடையலாம். 

PMAY திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? 

PMAY- க்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 

ஆன்லைன்: 

தனிநபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும். அவர்கள் விண்ணப்பிக்க செல்லுபடியாகும் ஆதார் கார்டை கொண்டிருக்க வேண்டும்.    ஆஃப்லைன்:   பொது சேவை மையம் (CSC) மூலம் கிடைக்கும் படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் பயனாளிகள் இந்த திட்டத்திற்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த படிவங்களின் விலை ரூ. 25 + GST. 

PMAY பயனாளி பட்டியலில் பெயரை எவ்வாறு சரிபார்ப்பது? 

இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் இந்த சில படிநிலைகளை பின்பற்றி பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா பட்டியலில் தங்கள் பெயரை சரிபார்க்கலாம்:    படிநிலை 1: அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.  படிநிலை 2: “பயனாளியை தேடுக” என்பதைக் கிளிக் செய்யவும்.  படிநிலை 3: ஆதார் எண்ணை உள்ளிடவும்.  படிநிலை 4: “காண்பி” என்பதை கிளிக் செய்யவும். 

வீட்டுக் கடன் வாங்குபவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்தால் அவர்களுக்கு பிரதமர் ஆவாஸ் திட்டத்தின் கீழ் மானியம் கிடைக்கும் 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link