Pongal Parisu | பொங்கல் சிறப்பு தொகுப்பு - ரேசன் கடைகளில் எப்போது வரை கிடைக்கும்?

Tue, 24 Dec 2024-3:54 pm,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் ரேஷன் கடைகள் மூலம், ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு (Ration Card Holders) தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்பு கொடுக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், கடந்தாண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பாக (Pongal Gift Pack) பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருள்களுடன் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு குறித்து சமீபத்தில் பேசிய கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் (Radhakrishnan IAS), பொங்கல் தொகுப்பில் இடம்பெறும் பொருள்கள் குறித்து வேளாண்துறை உள்ளிட்ட பல துறைகளுடன் இணைந்து ஏற்பாடுகளை செய்துவருவதாக தெரிவித்தார்.

மேலும், இந்த வாரத்திலேயே பொங்கல் சிறப்பு தொகுப்பு குறித்த அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் (Tamilnadu CM MK Stalin) வெளியிடுவார் என்றும் முதல்வரின் அறிவிப்புக்கு பின்னர் வரும் ஜன. 11ஆம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் அளித்தார்.

கடந்தாண்டை போலவே, பொங்கல் சிறப்பு தொகுப்பை வாங்குவதற்கு டோக்கன் (Pongal Parisu Token) இம்மாத இறுதியிலோ அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்திலோ ரேஷன் கடைகளில் வழங்கப்படலாம். அந்த டோக்கனில் பொங்கல் சிறப்பு தொகுப்பை எந்த நாளில், எந்த நேரத்தில் வாங்கலாம் என குறிப்பிடப்பட்டிருக்கும்.

நீங்கள் ஒருவேளை டோக்கனை வாங்காவிட்டாலோ, கொடுக்கப்பட்ட டோக்கனில் குறிப்பிடப்பட்ட நாளில் பொங்கல் தொகுப்பை பெறாவிட்டால் பொங்கல் பண்டிகை வரை (ஜன. 14) ரேஷன் கார்டை காண்பித்தும் பரிசு தொகுப்பை பெறலாம்.

பொங்கல் பண்டிகை வரை சிறப்பு தொகுப்பையும் வாங்க முடியாவிட்டால் அதன்பின் சிறப்பு தொகுப்பை வாங்க முடியுமா என கேள்வி பலருக்கும் இருக்கும். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை. கடந்தாண்டு ஜன.10, 11 தேதிகளில் டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கும், அதன்பின் விடுபட்டவர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகை ஜன. 14ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் இயங்கும். அதன்பின்னர், ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை என்பதால் அன்று மாலையுடன் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் நிறுத்தப்படலாம். விடுபட்ட பொங்கல் தொகை மற்றும் தொகுப்பில் உள்ள அனைத்து பொருள்களும் அன்று மாலையே சரக அலுவலகங்களுக்கு திருப்பி அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link