வாழ்க்கை அவ்வளவு தான்... 2 வாரம் முன் கலகலவென பேசிய 2 நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்!

Fri, 08 Sep 2023-1:00 pm,

ஆர்.எஸ். சிவாஜி மற்றும் மாரிமுத்து ஆகியோர் கடந்த மாதம் இறுதியில் விஜய் தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றனர். 

 

அந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ். சிவாஜி மற்றும் மாரிமுத்து ஆகியோர் மிகவும் கலகலப்பாக பேசி அதனை ரசிக்கத்தக்க அளவில் கொண்டு சென்றனர். 

அந்த நிகழ்ச்சி கடந்த ஆக. 20ஆம் தேதி ஒளிப்பரப்பானது. அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ யூ-ட்யூபில் உள்ள நிலையில், அதுவே பார்வையாளர்களை சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. 

அந்த ப்ரோமோ வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், ஆர்.எஸ். சிவாஜி மற்றும் மாரிமுத்து போன்ற இரு சிறந்த நடிகர்களையும் தமிழ் திரையுலகம் அடுத்தடுத்து இழந்துள்ளது. 

 

இதுகுறித்து நெட்டிசன் ஒருவர்,"2 வாரம் முன்னாடி Telecast ஆன நிகழ்ச்சில சந்தோஷமா வந்துட்டு போன 2 பேர் இப்ப இல்ல!" என உருக்கமாக பதிவு செய்துள்ளார். 

 

மாரிமுத்து இன்று காலை உயிரிழந்த நிலையில், ரசிகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மாரிமுத்துவின் உடல் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பாஸ்கர் காலணியில் அவரது பூத உடலானது வைக்கப்பட்டுள்ளது.  இன்று மாலை 3 மணி அளவில் தேனியில் உள்ள அவரது சொந்த ஊர் பசுமலைதேரிக்குச் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட உள்ளது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link