ஈரம் படத்தின் இந்தி ரீமேக் பிரபல நடிகை யார் தெரியுமா ?
லியோ மற்றும் பீஸ்ட் திரையில் பார்பதற்கு ஒளிப்பதிவு எந்த அளவு அட்டகாசமாய் இருந்ததோ அதே அளவில் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு அமைந்துள்ளது. இவர் தற்போது ஜான்வி கபூர் படத்தில் இணையவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஜான்வி கபூர் நடித்த முதல் படம் இந்தியில் தான். ஆனால் ஜான்வி கபூரின் அம்மா ஒரு தமிழ் நடிகை அதன்பின் இந்தி சினிமாவில் நுழைந்து போனி கபூரை கரம் பிடித்துள்ளார்.
தமன் இசையில் வெளியான ஈரம் படம் ஆதி நடிப்பில் திரையில் வெளியானது, ஆனால் ஜான்வி கபூருடன் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை.
ஜான்வி கபூர் சமீபத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து தேவாரா படத்தில் நடித்து உலகளவில் அதிக வசூலை அள்ளி குவித்துள்ளது.
மனோஜ் பரமஹம்சா லியோ, பீஸ்ட் மற்றும் துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் இணைந்து படத்தின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார்.
விஜய்யுடன் அதிகமான படத்தில் ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா இந்தியில் ஜான்வி கபூருடன் இணையவுள்ளார்.
இந்த படம் தமிழில் எப்படி நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளதோ அதேப்போல் வட இந்தியாவிலும் வரவேற்பை பெறும் என நம்பப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.