EPFO: UAN இணைப்பதற்கான கடைசி தேதியை மேலும் சில நாட்களுக்கு நீட்டித்து அதிரடி உத்தரவு!
வங்கிக் கணக்குகளில் (UAN) செயல்படுத்துவதற்கும் ஆதார் இணைப்பதற்குக் கடைசி தேதி நவம்பர் 30 ஆக இருந்தது. தற்போது அதனை நீடித்து கடைசி தேதி டிசம்பர் 15 வரை மாற்றம் செய்துள்ளது.இது நடப்பு நிதியாண்டில் சேர்ந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் இதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த புதிய EPFO 3.0 செயல்முறை பல ஊழியர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக அமைய வேண்டும் என்பதற்காகக் கூடுதல் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதில் தங்களின் வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் பலனைப் பெற முடியும்.
இந்த மாற்றம் தொடர்பாக சமூக ஊடகத்தில் எக்ஸ் தளத்தில் EPFO ஒரு பதிவை வெளியிட்டது. இந்த பதிவு EPFO உறுப்பினர்களுக்கு மிகுந்த பலனை அளித்துள்ளது. EPFO பயனாளர்களுக்கு மத்திய அரசு ஆதார் எண்ணை வங்கிக் கணக்குகளுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்தது மட்டுமல்லாமல், தற்போது கடைசி தேதியையும் நீட்டித்து மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது.
புதிய ஊழியர்களுக்கு இந்த வரம்பை ஈபிஎஃப் அதிகரிக்கக்கூடும் என்று ஏற்கனவே ஊகங்கள் இருந்தன. ELI திட்டத்தின் விவரங்கள் அரசாங்கத்தால் இன்னும் அறிவிக்கப்படாததே இதற்குக் காரணம். EPFO கடைசி தேதியை 15 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.
வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டம் என்பது இளைஞர்களை வேலை செய்ய ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் புதிய ஊழியர்களை நியமிக்கும் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தால் நிதி சலுகைகள் வழங்கப்படுகின்றன.
(ELI) திட்டத்தின் முக்கிய நோக்கம் வேலையின்மையைக் குறைப்பதும், தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதும் ஆகும்.
இந்தத் திட்டத்தில் முதலாளிகள் புதிய ஊழியர்களை நியமித்தால் அவர்களுக்கு அரசு சில நிதி ஊக்கத்தொகைகளை வழங்குகிறது. இந்த ஊக்கத்தொகை வரி தள்ளுபடிகள், சம்பள ஆதரவு அல்லது பயிற்சிக்கான பணம் போன்ற பலவிதத்தில் வர வாய்ப்பு உண்டு.
(ELI)திட்டத்தின் பயன்கள் வேலை தேடுபவர்களுக்கு, குறிப்பாக முதல் முறையாக வேலையைத் தொடங்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் புரிகிறது.இது ஒரு புதிய மற்றும் தகுதியான ஊழியர்களை நியமிக்க நிறுவனங்களை ஊக்குவிக்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. (ELI)திட்டத்தின் குறிக்கோள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதும் மற்றும் உழைக்கும் இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க உதவுவதும் இத்திட்டத்தின் நோக்கமாக அமைகிறது.