ரசிகர் கேள்விக்குக் கடுப்பான சமந்தா. அப்படி என்ன ரசிகர் கேள்வி கேட்டார் ?
)
தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகை சமந்தா. சமீபத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்த 'சிட்டாடல் ஹானி பன்னி’ வெப் சீரிஸ் புகழ்ப்பெற்ற பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.
)
மாடலிங் மற்றும் பாலிவுட் நடிகர் வருண் தவான் சமந்தாவுடன் இணைந்து ‘சிட்டாடல் ஹானி பன்னி’ வெப் சீரியஸுக்கான போட்டோ ஷூட்டை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர்.
)
சிட்டாடல் ஹானி பன்னி வெப் சீரியஸின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சமந்தா மற்றும் வருன் தவானிடன் பல கேள்விகள் கேட்டு ஜாலியாக கலந்துரையாடல் நிகழ்ந்தது.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சமந்தா தன் ரசிகர்களிடம் ஜாலியாக பேசி கொண்டிருந்தார்.
ஹானி பானி நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் ‘ நீங்கள் உடலை கொஞ்சம் அதிகரித்தால் நல்லா இருக்கும்’ என்று சொன்னவுடன் சட்டென்று கோபம் அடைந்தார்.
சமந்தாவிற்கு மயோசிடிஸ் நோய் இருப்பதை ரசிகர் தெரியாமல் கேள்வி கேட்டுவிட்டார். மயோசிடிஸ் நோயால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் மருத்துவர் ஆலோசனைப்படி நான் உணவு எடுத்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
சமந்தாவிற்கு அடிக்கடி கடுமையான அழற்சி ஏற்படுவதாகவும் அதனால் அவரது உடல் எடை கூடவும் செய்யும் குறையவும் செய்யும் என்று இவ்வாறுக் கூறினார்.
கடைசியாக ரசிகரிடம் சமந்தா‘தயவுசெய்து மற்றவர்களின் குறைகளை கண்டுப்பிடிக்காதீர்கள் என்றும் குறையைவிட்டு திறமையைக் கண்டுப்பிடியுங்கள். மற்றவர்களை இந்த உலகில் நிம்மதியாக வாழவிடுங்கள் என்று அன்புக்கட்டளை விடுத்தார்.