தீபாவளிக்கு முந்தைய நாள் ‘இந்த’ 2 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!!
மேஷம்:
நீண்ட நாட்களாக வராமல் இருந்த தொகை, கைக்கு வந்து சேரலாம். மேலதிகாரியிடம் கவனமாக நடந்து கொள்ளவும். உடன் பணி புரிபவர்களுடன் அனுசரித்து செல்லவும்.
ரிஷபம்:
உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அணுகூலமான செய்தி வந்து சேரலாம். சொத்து பிரச்சனை தீர வாய்ப்புண்டு.
மிதுனம்:
முடிக்க முடியாத வேலைகளை கையில் எடுக்க வேண்டாம். வீட்டில் குடும்பத்தினருடன் சண்டை ஏற்படலாம். உங்கள் பெயரில் இருக்கும் சொத்தில் இருந்த பிரச்சனைகள் தீர வாய்ப்புள்ளது. அன்புக்குரியவர்கள் உங்களுடன் நேரம் செலவிட எதிர்பார்ப்பார்கள்.
கடகம்:
முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் வரும் நாள். உறவுகளுடன் சண்டை ஏற்பட்டாலும் பின்னர் சமாதானம் ஆகிவிடுவீர்கள். வீடு கட்டுவது குறித்த யோசனையில் இருப்பீர்கள்.
சிம்மம்:
உடல் நலனை மேம்படுத்திக்கொள்ள ஆயத்தமாவீர்கள். வீட்டில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக்கொண்டிருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
கன்னி ராசி:
உடல் நிலை சரியில்லாமல் இருந்தவர்கள் இன்று மேம்படுவீர்கள். வெளியூர் செல்பவர்களுக்கு நல்ல அனுபவங்கள் கிடைக்கும். திடீர் பணவரவால் தொழிலதிபர்களுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாகலாம்.
துலாம்:
சுய தொழில் தொடங்கி இருப்பவர்களுக்கு லாபகரமான நாள். சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. எதிர்பாராத நபரால் நல்ல வாய்ப்புகள் கிட்டும்.
விருச்சிகம்:
ஒரே நேரத்தில் இரண்டு வருமானங்களை பார்க்க வாய்ப்புள்ளது. வேலை பார்க்கும் இடத்தில் பாராட்டுகள் கிட்டலாம். வீட்டில் உள்ளவர்கள் உதவியால் மகிழ்ச்சி கிட்டும், சுமை நீங்கும். நீண்ட நாட்களாக மாற்ற நினைக்கும் விஷயங்களை மாற்றுவீர்கள்.
தனுசு:
நெடுநாட்களாக இழுபறியில் இருந்த பண வரவு இன்று வந்து சேரலாம். நெடுந்தூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. குடும்பத்தில் புதிதாக வந்த உறுப்பினரால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகர ராசி:
வயதானவர்களுக்கு உடலநலனில் தொய்வு ஏற்படலாம். நீண்ட நாள் கனவு எதிர்பார்க்காத வகையில் நிறைவேரலாம். குடும்பத்துடன் பயணம் மேற்கொள்வீர்கள்.
கும்பம்:
நல்லதை மட்டுமே யோசிக்க வேண்டிய நாள் இன்று. தொழிலில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நிலம் அல்லது வீடு வாங்க முடிவு செய்வீர்கள்.
மீனம்:
தொழில் ரீதியாக நல்ல மாற்றங்கள் உண்டாகும். பல நாட்களாக காத்திருந்த கேள்விக்கு இன்று பதில் கிடைக்கலாம். திடீர் நண்பர்கள் சந்திப்பால் மகிழ்வீர்கள். அன்புக்குரியவர்கள் இன்று அதிக அன்பாக நடந்து கொள்வர்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)