சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்கும் நயன்தாராவின் தம்பி! எந்த படத்தில்?
நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் திரையுலகில் அதிக ரசிகர் கூட்டம் கொண்ட நடிகராக விளங்குகிறார். கடந்த 13 வருடத்தில் அசுர வளர்ச்சி பெற்ற நடிகர் இவர்.
சூர்யாவை வைத்து புறநானூறு படத்தை இயக்க இருந்த சுதா கொங்கரா, அவர் படத்தில் இருந்து விலகியதால் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து அந்த படத்தை இயக்க இருக்கிறார். இதில் சிவாவுடன் சேர்ந்து மலையாள நடிகர் ரோஷன் மாத்யூ நடிக்க இருக்கிறார்.
சிவகார்த்திகேயன், அமரன் படத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நடித்து முடித்தார். அதன் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸின் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து, புறநானூறு படத்தின் படப்பிடிப்பி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக, புறநானூறு படத்தில் ஒரு மறைந்த நடிகரின் மூத்த மகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நடிகர் யார் தெரியுமா?
அவர் வேறு யாருமில்லை, அதர்வாதான்! மறைந்த நடிகர் முரளியின் மகனான இவர் பானா காத்தாடி படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் அவை பெரிதாக இவருக்கு கைக்கொடுக்கவில்லை.
புறநானூறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ஸ்ரீலீலாவும் நடிக்க இருக்கிறார். தெலுங்கு பட நடிகையான இவர், முதலில் விஜய்யின் தி கோட் படத்தில் ‘மட்ட’ பாடலுக்கு நடனமாட அழைக்கப்பட்டார். அதற்கு இவர் மறுத்துவிட்டதால் அந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு சென்றது.
அதர்வா, இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நயன்தாராவிற்கு தம்பியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா, அதர்வாவிற்கு ஜோடியாக புறநானூறு படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.