பிக்பாஸ் 8 புதிய தொகுப்பாளர்! ஏற்கனவே நிகழ்ச்சியில் பங்கேற்றவர்!! யார் தெரியுமா?

Fri, 09 Aug 2024-11:31 am,

கடந்த 7 பிக்பாஸ் சீசன்களை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், திடீரென தான் இனி இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருக்கப்போவதில்லை என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், அவரது இடத்தில் வேறு ஒரு நடிகரை இறக்க பிக்பாஸ் குழு திட்டமிட்டிருக்கிறதாம். அது எந்த நடிகர்? 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 7 போட்டி, பெரிய பெரிய சர்ச்சைகளை கிளப்பி விட்டது. நடிகர் கமல்ஹாசனும் பல்வேறு வகையிலான விமர்சனங்களை சந்தித்து வந்தார். இதைத்தொடர்ந்து, இவரது அறிவிப்பினால் நிம்மதி அடைவதாக சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சி, அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்படும். இந்த மாதம் அதற்கான டெஸ்ட் ஷூட் மற்றும் ப்ரமோ பணிகள் நடைபெற இருந்தது. கமல்ஹாசன், இதில் கலந்து கொண்டதாகவும் பின்னர் நிகழ்ச்சியில் இருந்து பின்வாங்கியதாகவும் கூறப்படுகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியதை தொடர்ந்து, அடுத்து யார் புதிய தொகுப்பாளர் என்ற கேள்வி ரசிகர்கள் இடையே பெரிதாக உரையாடப்படும் விவாதமாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி, சூர்யா, சிலம்பரசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரின் பெயர்கள் புதிய தொகுப்பாளரின் பெயராக அடிப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத ஒரு நபர் பிபி ஹோஸ்ட் ஆக மாறியிருக்கிறார். 

கமல்ஹாசனே அந்த நடிகரை ரெகமண்ட் செய்ததாகவும், அவரும் அதற்கு இசைந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

நீங்கள் நினைப்பது போல, அந்த நடிகர் சிம்பு அல்ல. இவர், ஏற்கனவே ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தாலும் இந்த முறை வாய்ப்பு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறதாம். 

அந்த நடிகர் வேறு யாருமில்லை, சரத்குமார்தான். கமல்ஹாசனை விட வயதில் மூத்த இவர், உடலை இன்னும் கட்டு மஸ்தாக வைத்திருக்கிறார். இவருக்கும் திரையுலகிலும் அரசியலிலும் அனுபவம் அதிகம் இருக்கிறது. 

சரத்குமார் தொகுப்பாளராவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்கள் இதனை நம்ப ஆரம்பித்து விட்டார்கள். ஒரு சிலர், “மீண்டும் அரசியல்வாதியா..” என அலறி ஓட..ஒரு சிலர், “இவர் வந்தா நல்லாத்தான் இருக்கும்..” என்று கூறி வருகின்றனர். எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தவுடன்தான் தெரிய வரும். இவர், ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5ல், பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு உள்ளே சென்ற விருந்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link