இந்தியன் 2 படத்தில் சித்தார்த்திற்கு பதில் நடிக்க இருந்தவர்! யார் தெரியுமா?

Sun, 11 Aug 2024-12:52 pm,

கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 திரைப்படம், ஜூலை 12ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

இந்தியன் 2 திரைப்படம், தியேட்டரில் வெளியான போது ரசிகர்களின் நெகடிவ் விமர்சனங்களை பெற்றது. ஆனால், ஓடிடியில் ரிலீஸான பிறகு பயங்கர சிரிப்பூட்டும் மீம்ஸ்களையும் ட்ரோல்ஸ்களையும் சந்தித்து வருகிறது. 

இந்தியன் 2 படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் சித்தார்த் நடித்திருந்தார். படத்தின் ப்ரமோஷன்களின் போது இவர் நடந்து கொண்ட விதமும் பேசிய விஷயங்களும் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால், படத்தில் இவரை பார்த்தவர்களும் இவரை கரித்துக்கொட்டி வந்தனர். 

அது மட்டுமன்றி, இந்தியன் 2 படத்திற்கு படக்குழுவினர் பெரிய லெவலில் எதிர்பார்ப்பை கூட்டினர். இதுவும், இப்படம் தோற்றுப்போவதற்கு ஒரு காரணமாக கருதப்பட்டது. 

இந்தியன் 2 படத்தில் சித்தார்த்தின் கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் வேறு ஒரு நடிகரிடம்தான் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 

அந்த நடிகர் வேறு யாருமில்லை, சிவகார்த்திகேயன் தான். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைப்பெற்று வந்தது. அப்போதே, அதில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டிருக்கிறது. 

படப்பிடிப்பு நடைப்பெற்ற சமயத்தில் சிவகார்த்திகேயன், இன்னும் சில படங்களில் கமிட் ஆகியிருந்தார். இதனால் இப்படத்தில் நடிக்க அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இவர் நடிக்காததே நல்லதுதான் என ரசிகர்கள் பலர் பேசி வருகின்றனர். 

சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்திருக்கும் ‘அமரன்’ திரைப்படம், வரும் தீபாவளியை ஒட்டி, வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியாகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link