விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் 37 வயது பிரபல ஹீரோ!! யார் தெரியுமா?

Tue, 10 Sep 2024-1:33 pm,

கோலிவுட்டிற்கு புதிதாக வந்திருப்பவர், ஜேசன் சஞ்சய். விஜய்யின் மகனான இவர் தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார்.

ஜேசன் சஞ்சய் தனது தந்தையுடன் “வசந்த முல்லை” பாடலிலும் “நான் அடிச்சா தாங்க மாட்ட” பாடலிலும், நடனமாடியிருக்கிறார். 

ஜேசன், பள்ளிப்படிப்பை முடித்தவுடன் வெளிநாட்டிற்கு சென்றார். கனடாவில் இருக்கும் பிரபல திரைப்பட கல்லூரியில் பயின்ற அவர் கடந்த ஆண்டு இந்தியா திரும்பினார். 

ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. 

ஜேசன் சஞ்சய், இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியானதுடன் சரி, அதன் பிறகு வேறு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கவின் அல்லது துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. 

தற்போது, ஜேசனின் படத்தில் சந்தீப் கிஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

37 வயதாகும் சந்தீப் கிஷன், ராயன் படம் மூலம் வைரலாகி, இப்போது தமிழ் திரையுலக ரசிகைகளின் க்ரஷ் லிஸ்டில் இருக்கிறார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link