மேஜர் முகுந்த் மகளுடன் விஜய் ! வைரலாகும் போட்டோ

Thu, 24 Oct 2024-12:33 pm,
vijay with real amaran daughter

மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போரிட்டு வீரமரணமடைந்த பட்டாலியன் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் வீரர்.  தளபதி விஜய் முகுந்த் வரதராஜன் மகள் அர்ஷேயாவைப் பார்பதற்காக நேரில் சென்றார்.

vijay with real amaran daughter

விஜய்யின் ‘தலைவா’ படத்தின் தமிழ் பசங்க பாடல் ரேடியோவில் ஒலித்தபோது அர்ஷயா திடீரென்று எழுந்து பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடி பாடல் பாடி மகிழ்ந்தார். இதனை அறிந்த விஜய் குழந்தையை சந்திக்க ஆசைப்படுவதாகக் கூறினார்.

vijay with real amaran daughter

விஜய் முகுந்த் மகளை பார்பதற்கு ஆசைப்பட்டதால் விஜய்யின் உதவியாளர் உடனே முகுந்த் மகளைப் பார்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த வகையில் விஜய் வடபழனியில் முகுந்த் மகள் அர்ஷேயாவுடன் நேரம் செலவிட்டார்.

 

மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த போராட்ட சம்பவங்கள் மற்றும் வீர செயல்கள், இவரின் குடும்பங்கள், மனைவி, குழந்தை என முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதை படமாக எடுக்கபட்டது.

 

 

முகுந்த் வரதராஜன்  வாழ்க்கையில் நடந்த ராணுவ வீரப் பணிகள் மற்றும் அவர் தீவிரவாதிகளுடன் போராடியது போன்றவை அனைத்தும் மையப்படுத்தி எடுக்கப்பட்டப் படம் ‘அமரன்’ 

‘அமரன்’ இப்படம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் , சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரின் நடிப்பில் வெளியான ஒருமாபெரும் வீரரின் வாழ்க்கை படம் . 

அமரன் திரைப்படம் குடும்பத்தினரைக் கவரும் விதத்தில் சிவகார்த்திகேயன் ரியல் ஹீரோ முகுந்த் போல் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் முகுந்த் கதாப்பாத்திரத்திற்கு  பொருத்தமாகியுள்ளார் எனப் பலரும் கூறினர்.

 

’அமரன்’ திரைப்படம் ரியல் ஹீரோ முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் நடந்த போரட்ட சம்பவங்கள் உட்பட பல நிகழ்வுகள் குறித்து திரைப்படமாக எடுத்து வெளியிடப்பட்டது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link