Velpari : ‘வேள்பாரி’ படத்தில் நடிக்கும் 2 முன்னணி தமிழ் நடிகர்கள்!! யார் தெரியுமா?
)
வேள்பாரி நாவலின் கதையை, இயக்குநர் ஷங்கர் படமாக இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர், இந்த படத்தை இயக்க அவர் பல வருடங்களாக திட்டமிட்டு வருகிறாராம்.
)
சில நாட்களுக்கு முன்பு, சங்கர் தன்னிடம் சு.வெங்கடேசன் எழுதிய “நான் யுக நாயகன் வேள்பாரி” நாவலின் காப்புரிமை (copy right) இருப்பதாக கூறி ஒரு பதிவை வெளியிட்டார். அதில், அந்த கதையின் சில முக்கிய அம்சங்களை படம் ஒன்றில் உபயோகித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அந்த காட்சிகளை நீக்கவில்லை என்றால், கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
)
அவர் கூறியது, ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா: பாகம் 1 படத்தின் டிரைலர்தான் என கூறப்பட்டது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.
வேள்பாரி படத்தை, ஷங்கர் மூன்று பாகமாக இயக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் அவர் இரண்டு முன்னணி ஹீரோக்களை நடிக்க வைக்க இருக்கிறாராம்.
அவர்கள் வேறு யாருமில்லை, சூர்யாவும் விக்ரமும்தான். இருவருமே, நடிகர்கள் என்பதை தாண்டி, சிறந்த திரை கலைஞர்களாக சாதித்து வருகின்றனர்.
பிதாமகன் படத்தில் கடைசியாக ஒன்றாக நடித்த இவர்கள், மீண்டும் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
இருவருமே, ராஜா கால தோற்றத்திற்கு அப்படியே பொருந்தி போவதால், ஷங்கர் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம்.
இவர்கள் வேள்பாரி படத்தில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.