சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கும் 53 வயது அழகு நடிகை! அவர் யார் தெரியுமா?
தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக இருந்து துணை நடிகராக மாறிய இவருக்கு, உந்துதல் அளித்த திரைப்படம் எதிர்நீச்சல்.
சிவகார்த்திகேயனின் சினிமா வளர்ச்சிக்கு தனுஷ், அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் உதவி இருக்கின்றனர். இதையடுத்து, அவரும் சினிமாவில் அசுர வளர்ச்சியை அடைந்து விட்டார்.
ஆரம்பத்தில், கிராமத்து இளைஞரின் கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், பின்னர் போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரம் பின்பு சாதாரண நகரத்து இளைஞரின் கதாப்பாத்திங்களுக்கு மாறினார்.
சிவகார்த்திகேயனின் படங்கள், பெரிய அளவிற்கான திரைக்கதையாக இல்லாமல் இருந்தாலும் கூட அவரது ரசிகர்களுக்கு பிடித்ததாக இருக்கும். குறிப்பாக இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம்.
கடந்த சில ஆண்டுகளாக, சிவகார்த்திகேயன் நடித்து வரும் படங்கள், ஃப்ளாப்பாகி வருகின்றன. பிரின்ஸ், அயலான் உள்ளிட்டவை அதில் அடங்கும்.
கடந்த ஆண்டு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதையொட்டி, அவர் அமரன் படத்திலும் சில நாட்களுக்கு முன்பு நடித்து முடித்தார். இந்த படம், வரும் தீபாவளியை ஒட்டி செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது.
டான் படத்தை இயக்கி பிரபலமான சிபி சக்ரவர்த்தி மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் 53 வயதான ரம்யா கிருஷ்ணன் அவருக்கு தாயாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ரம்யா கிருஷ்ணன், ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் சில நிகழ்ச்சிகளில் இணைந்து பணி புரிந்து இருக்கிறார். குறிப்பாக ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் நடுவராக இருந்த போது இவர்கள் பல தருணங்களை மேடையில் ஜாலியாக பகிர்ந்திருக்கின்றனர்.