‘மட்ட’ பாடலில் த்ரிஷாவிற்கு பதில் ஆட இருந்த 23 வயது நடிகை!! யார் தெரியுமா?

Fri, 13 Sep 2024-4:01 pm,

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் படம், தி கோட் (The Greatest Of All Time). இந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க, வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். 

தி கோட் படத்தில் மட்ட பாடல் இடம் பெற்றிருந்தது. இதில், நடிகை த்ரிஷா நடனம் ஆடியிருந்தார். 

நடிகை த்ரிஷா, 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் டாப் நடிகையாக இருக்கிறார். ஆனால், இதுவரை ஒரு முறை கூட ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடும் வேலையை செய்ததே இல்லை. ஆனால், முதன்முறையாக தி கோட் படத்திற்காக இவ்வாறு நடனமாடியிருக்கிறார். 

த்ரிஷா, கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு படங்களில் கமிட் ஆகிவிட்டார். தமிழில் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் கூட நடித்து வருகிறார். தி கோட் படத்தில் மட்ட பாடலுக்கு நடனமாட த்ரிஷாவை முதலில் வெங்கட் பிரபு கேட்கவில்லையாம். வேறு யாரை கேட்டார் தெரீயுமா? 

அந்த நடிகை வேறு யாரிமில்லை, தெலுங்கு நடிகை ஸ்ரீலீலாதான். 

மகேஷ் பாபுவுடன் குண்டூர் காரம் படத்தில் “மார்த்தபட்டி” பாடலில் நடனமாடியிருக்கிறார். 

23 வயதாகும் இந்த நடிகை, தெலுங்கில் பல்வேறு பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். 

ஸ்ரீலீலா, ஒரு பாடலில் மட்டும் தோன்ற விரும்பாததால் இதில் நடிக்கவில்லை என கூறப்படுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link