தக் லைஃப் பட அப்டேட் கொடுத்த த்ரிஷா! என்ன சொன்னார் தெரியுமா?
தமிழ் திரையுலகில் முக்கிய படமாக உருவாகி வருகிறது, தக் லைஃப். இந்த படத்தின் மூலம் கமல்ஹாசனும் மணிரத்னமும் நாயகன் படத்திற்கு பிறகு ஒன்று சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
ஏற்கனவே நடிகை த்ரிஷா, மணிரத்னமின் ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.
தக் லைஃப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார். இன்னொரு கேரக்டரில் வரும் சிலம்பரசன், அவருக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
சிம்புவும் த்ரிஷாவும் கடைசியாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜோடியாக நடித்தனர். இதையடுத்து, இப்போது பல ஆண்டுகள் கழித்து தக் லைஃப் படத்தில் ஜோடி சேர்ந்திருக்கின்றனர்.
சிலம்பரசன், த்ரிஷா இணைந்து நடனமாடும் ஒரு ரொமாண்டிக் பாடல், தக் லைஃப் படத்தில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
v
இந்த பாடலின் படப்பிடிப்பு முடிந்ததை குறியிட்டு காட்டும் வகையில் த்ரிஷா ஒரு போட்டோவை தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இதுதான் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி. இதில், மணிரத்னமின் பாம்பே படத்தி இடம் பெற்றிருந்த “கண்ணாளனே” பாடலையும் இணைத்திருக்கிறார்.