படு டைட்டான உடையில் ஓவர் கவர்ச்சி உடையில் நடிகை யாஷிகா ஆனந்த்
)
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். தனது புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது இவரது வழக்கம்.
)
யாஷிகா, துருவங்கள் 16 படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். அதற்கு முன்னர் கவலை வேண்டாம் என்ற படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
)
மிக இளம் வயதிலேயே திரையுலகிற்குள் நுழைந்த கதாநாயகிகளுள் ஒருவர், யாஷிகா. இவர் நடிக்க வந்த போது, இவரது வயது 16 என கூறப்படுகிறது.
யாஷிகாவின் புகழை இன்னும் பெரிதாக தூக்கிவிட்ட படம், இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படத்தில் அவர் பேய் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
யாஷிகா, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கினார். இதில் தனது உயிர் தோழியை பறிகொடுத்தார். இப்போதுதான் அதிலிருந்து மீண்டு வந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
யாஷிகா அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவதை ஒட்டி, தற்போதும் சில போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். யாஷிகாவின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.