பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்‌ஷனில் வெளியேறிய நபர்!! சர்ச்சைக்குரிய போட்டியாளர்..யார் தெரியுமா?

Sun, 20 Oct 2024-11:22 am,

பிக்பாஸ் 8 போட்டியை தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி. இவர், கமல்ஹாசனுக்கு பதிலாக ஹோஸ்ட் ஆக வந்தவுடன் பலர் இந்த வேலையை இவர் எப்படி சமாளிப்பாரோ என்று புலம்பி வந்தனர். ஆனால், இந்த ஷோவை சரியாக வழி நடத்தி வருகிறார் விஜய் சேதுபதி. 

இந்த முறை, பிக்பாஸ் வீடு பாய்ஸ் vs கேர்ள்ஸ் வீடாக மாறியிருக்கிறது. போட்டிகளும் அப்படியே நடத்தப்படுகிறது. 

செல்லம்மா சீரியல் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏற்கனவே பிரபலமான அன்ஷிதா, பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் அவர் கவனம் ஈர்க்கும் போட்டியாளராகவும் இருக்கிறார். 

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் வார இறுதியில் விஜய் சேதுபதியின் எபிசோட் ஒளிபரப்பாகும். கடந்த வாரம் அனைத்து போட்டியாளர்களையும் அவர்களின் தவறுக்காக ட்ரில் செய்த விஜய் சேதுபதி, இந்த வாரமும் அதையே தொடர்ந்தார். 

தர்ஷா குப்தா ஆரம்பத்தில் ஸ்வீட் ஆன போட்டியாளராக தோன்றினாலும் பிறகு ரசிகர்கள் மத்தியில் நெகடிவான விமர்சனங்களை பெற்று வருகிறார். அதே போல, ஆரம்பத்தில் இருந்து பழைய பஞ்சாங்கம் பேசும் போட்டியாளராக கருதப்பட்ட ரஞ்சித், இப்போதும் அதே பெயரை பெற்று வருகிறார். 

கடந்த வார எபிசோடில் விஜே விஷால் செய்த தவறுகளை சுட்டிக்காட்டினார், விஜய் சேதுபதி. 

சாச்சனா, பிக்பாஸ் 8 வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுள் மிகவும் வயது குறைவானவராக இருக்கிறார். கடந்த வாரம் இவர் போட்டியாளர்களிடம் சிறிய விஷயத்திற்காக சண்டையிட்டார். அதை விஜய் சேதுபதி இந்த வார எபிசோடில் கண்டித்தார். 

ஜாக்குலின், இந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பித்தார். இருப்பினும் விஜய் சேதுபதியின் கண்டிப்புக்கு ஆளானார். 

ஜாக்குலின் அடிக்கடி கத்துவதும், அழுவதும் ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்த வாரம் நாமினேட் செய்ய பட்டவர்களில் யார் பிக்பாஸ் 8 இல்லத்தில் இருந்து எவிக்ட் ஆகியிருக்கிறார் தெரியுமா? 

அந்த போட்டியாளர் அர்ணவ்தான்! இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் மனைவிக்கு துரோகம் செய்தது, பின்னர் காவல் நிலையத்தில் இவர் மீது புகார் கொடுக்கப்பட்டது போன்ற விஷயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. 

அர்னவ், இன்னும் கொஞ்ச நாள் பிபி 8 இல்லத்தில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link