டான் பட இயக்குநருக்கு திருமணம்! விழாவை சிறப்பித்த சிவகார்த்திகேயன்...வைரல் போட்டோஸ்!

Thu, 05 Sep 2024-4:22 pm,

டான் படத்தை இயக்கியவர், சிபி சக்ரவர்த்தி. இவர் முதன் முதலில் இயக்கிய படமே இதுதான். 

2022ஆம் ஆண்டு வெளியான டான் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். சிபியின் உண்மையான கதையை வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

தற்போது, மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் இவர் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறாராம். ரம்யா கிருஷ்ணன் அம்மாவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 

சிபி சக்ரவர்த்திக்கு, திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அவர் வர்ஷினி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். 

சிபி-ரோஷினியின் திருமண வரவேற்பில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

இந்த விழாவில் சிவகார்த்திகேயன், சிவாங்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர். 

சிபியின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link