அமர்க்களமாக வசூல் வேட்டையை ஆரம்பித்த ‘ கங்குவா’ முதல் நாளில் எத்தனை கோடி தெரியுமா !!!
2022ஆம் ஆண்டில் “எதற்கும் துணிந்தவன்” படத்திற்குப் பிறகு சூர்யாவிற்கு எந்த படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதன் காரணமாக கங்குவா படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு கிளம்பியது. இப்படத்திலிருந்து வெளியான டீசர், டிரெய்லர்கள் ரசிகர்களைக் குஷி படுத்தியது.
ஞானவேல் ராஜா தயாரிப்பில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 தேதி நேற்று வெளியான ’கங்குவா’ ஒரே நாளில் பல மொழிகளில் எத்தனைக் கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்து இங்கு முழுமையாகப் பார்க்கலாம்.
சூர்யா, திஷா பட்டாணி, நட்டி நடராஜ், கோவை சரளா, கே.எஸ். ரவிக்குமார், போஸ் வெங்கட், கருணாஸ், பிரேம் குமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். கங்குவா படம் உலகமெங்கும் 10500- 11500 திரையரங்குகளில் வெளியாகி உள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
அட்டகாசமான த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் நிறைந்த படம் எடுப்பதில் இயக்குநர் சிவாவை மிஞ்ச யாருமில்லை என்று சொல்லும் அளவுக்கு கங்குவா படத்தினை இயக்கியிருக்கிறார். தமிழில் வெளியான பான் இந்தியா திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு சிவாப் பெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகள் கங்குவா உருவாகியுள்ளது . இப்படத்திற்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பொதுவாக மக்கள் மனதில் பான் இந்தியா படம் குறித்து சில கருத்துகள் இருக்கும். ஆனால் இப்படத்தில் அனைத்தும் கலந்த கலவையாக “கங்குவா” திரைப்படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
கங்குவா நாள் 1 தமிழ் 3டியில் காலை காட்சிகள்: 45.45%, மதியம் காட்சிகள்: 43.35%, மாலை காட்சிகள்: 47.96% மற்றும் இரவுக் காட்சிகள்: 62.80%, ஹிந்தியில் டப்பிங்கில் கங்குவா முதல் நாளில் காலை காட்சிகள்: 6.75%, மதியம் காட்சிகள்: 10.95%, மாலை காட்சிகள்: 11.15% மற்றும் இரவுக் காட்சிகள்: 17.02%.
தெலுங்கில் முதல் நாளில் காலை காட்சிகள்: 65.15%, மதியம் காட்சிகள்: 55.21%, மாலை காட்சிகள்: 48.61% மற்றும் இரவுக் காட்சிகள்: 63.51%, கன்னடத்தில் முதல் நாளில் காலை காட்சிகள்: 0%, மதியம் காட்சிகள்: 0%, மாலை நிகழ்ச்சிகள்: 0% மற்றும் இரவு நிகழ்ச்சிகள்: 0%, மலையாளத்தில் கங்குவா முதல் நாளில் காலை காட்சிகள்: 13.33%, மதியம் காட்சிகள்: 14.29%, மாலை காட்சிகள்: 31.78% மற்றும் இரவுக் காட்சிகள்: 27.73%.