படையப்பா படம் ரீ-ரிலீஸ்!! எப்போது தெரியுமா?
ரஜினியின் சினிமா வாழ்க்கையில் அவருக்கு ஏற்றத்தை கொடுத்த படம் படையப்பா. இந்த படம், 25 வருடங்களுக்கு முன்பு வெளியான போது பெரிய ஹிட் அடித்தது.
கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் உருவான படையப்பா திரைப்படம், பின்னணி இசை, பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை பெரிதாய் கவர்ந்தது.
இந்த படத்தில் ஹீரோவுக்கு இணையாக வலுவான கதாப்பாத்திரமாக இருந்தது, ரம்யா கிருஷ்ணனின் வில்லி கதாப்பாத்திரம்.
படையப்பா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ராதா ரவி, நாசர், அபாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். குறிப்பாக இப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கடைசி படமும் கூட.
இந்த படத்தை எத்தனை முறை டிவியில் போட்டாலும் அதனை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்ப்பர். இப்போது அப்படம் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் தமிழ் திரையுலகிற்கு வந்து 50 வருடங்கள் ஆகிறது. இதனை கொண்டாடும் வகையில் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படம், வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் எனக்கூறப்படுகிறது.