பராசக்தி பட பஞ்சாயத்து! சிவகார்த்திகேயன் vs விஜய் ஆண்டனி-2 பேரில் டைட்டில் யாருக்கு?
)
சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 25வது படமாக உருவாகியிருக்கும் பராசக்தி திரைப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது. இது வெளியாவதற்கு முன்னரே விஜய் ஆண்டனி நடித்துள்ள அவரது 25வது படத்தின் 2 போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இதில் ஒரு போஸ்டரில் படத்தின் பெயர் பராசக்தி என குறிப்பிடப்பட்டிருந்தது.
)
ஒரே நாளில், ஒரே பெயரில் படத்தின் டைட்டில் ரசிகர்களை குழப்பமடைய செய்தது. சொல்லப்போனால், இது சிவகார்த்திகேயனுக்கும் 25வது படம், விஜய் ஆண்டனிக்கும் 25வது படமாகும்.
)
விஜய் ஆண்டனியின் பராசக்தி படம், தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு தமிழில் சக்தி திருமகன் என்றும், தெலுங்கில் பராசக்தி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் படத்திற்கு, பழைய படத்தின் டைட்டில் வக்கப்படுவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்னர், அவர் நடித்திருந்த எதிர்நீச்சல், காக்கி சட்டை, வேலைக்காரன், அமரன் ஆகிய படங்களின் பெயர்கள் பழைய படங்களின் பெயர்கள்தான். எனவே, இந்த படத்தின் டைட்டில் மாற்றம் பெறாது எனக்கூறப்படுகிறது.
சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சூர்யாதான். அவர் இதிலிருந்து விலகிக்கொண்டதை அடுத்து, சிவகார்த்திகேயன் இதில் ஹீரோவாக மாறினார்.
பராசக்தி படத்தின் பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கும் நிலையில் நேற்று Dawn Pictures தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை தயாரிக்கும் Dawn Pictures நிறுவனத்திற்கு ஏவிஎம் நிறுவனம் இந்த டைட்டிலை வழங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதே நேரத்தில் விஜய் ஆண்டனியும் ஒரு பதிவினை வெளியிட்டார். 2024ஆம் ஆண்டு 7ஆம் மாதமே தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் தனது ‘பராசக்தி’ படத்தின் டைட்டிலை பதிவு செய்ததற்கான சான்றிதழை அவர் பதிவிட்டிருந்தார்.
பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த இரு படங்களின் டைட்டில் பிரச்சனை, நீதிமன்றம் வரை நீளுமா? அல்லது படக்குழுவினரே சுமூகமாக பேசி முடித்துக்கொள்வரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.