பராசக்தி படத்தின் டைட்டில் டீசரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா? கதை இதுதான் போல..
)
பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன், கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்பது டைட்டில் டீசர் மூலம் தெரியவந்துள்ளது.
)
சூர்யாவை வைத்து சுதா கொங்கரா இயக்க இருந்த புறநாணூறு படத்தின் கதை இந்தி திணிப்பு மற்றும் அதற்கு எதிரான போராட்டம் குறித்த கதையாகும். இதுவும் அதே கதை போலதான் இருக்கும் என்பதற்கு சான்றாக, இந்த போராட்ட காட்சி வைக்கப்பட்டுள்ளது.
)
இந்த கதை, 1960களில் நடப்பது போல காட்சி படுத்தப்பட்டிருக்கலாம். இதில் இடம் பெற்றிருக்கும் கட்டடங்களை பார்க்கையில் அவை பழைய காலத்திற்குறியவை போலத்தான் தெரிகிறது.
சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா உள்பட அனைவரது தோற்றமும் கூட பழைய காலத்தில் இருப்பது போலவே உள்ளது. எனவே, 1960களில் நடந்த இந்தி திணிப்பிற்கு எதிராக நடந்த போராட்ட கதையாக இருக்கலாம்.
இந்த டைட்டில் டீசரில், சிவகார்த்திகேயன் சொடக்கு போட்டுக்கொண்டே வருவது போல ஒரு பக்கம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம், ரவி மோகன் துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இவர்களுக்கு இடையில் அதர்வா, ஹீரோவுக்கு ஆதரவாக நிற்கும் கதாப்பாத்திரமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. தற்போதைய காட்சிகளை வைத்து பார்க்கையில் சிவகார்த்திகேயனுக்கு இந்த படத்தில் ஜோடி இல்லை என்பது போல ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர்.
மேற்கூறிய தகவல்கள் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. இவை இணையத்தில் உலா வரும் செய்திகள் மட்டுமே.