Spider Man 4 : ஸ்பைடர் மேன் 4 படத்தில் புது ஹீரோயின்!! ஜெண்டயா இல்லை-வேறு யார்?
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஹாலிவுட் படங்களுள் ஒன்று, ஸ்பைடர் மேன். அதிலும் டாம் ஹாலண்ட் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி வரும் ஸ்பைடர் மேன் படங்களுக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகமாக இருக்கிறது.
28 வயதான டாம் ஹாலண்ட், ஸ்பைடர் மேன் படங்களில் பள்ளிக்கு செல்லும் டீன்-ஏஜ் நாயகனாக வருகிறார்.
டாம் ஹாலண்ட் நடிப்பில் இதுவரை 3 ஸ்பைடர் மேன் படங்கள் வெளியாகியிருக்கின்றன. இது தவிர அவர் சில மார்வெல் படங்களிலும் நடித்திருக்கிறார்.
ஸ்பைடர் மேனுக்கு ஜோடியாக எம்.ஜே எனும் கதாப்பாத்திரம் இடம் பெற்றிருந்தது. இதில், ஜெண்டையா நடித்து வந்தார்.
கடந்த 3 ஸ்பைடர் மேன் படங்களில், 2ல் இவர்தான் கதாநாயகி. கடைசியாக வெளியான ஸ்பைடர் மேன் நோ-வே ஹோம் படத்தில் கதாநாயகி, அனைத்தையும் மறந்து விடுவது போல காட்டப்பட்டிருந்தது.
இனி வர இருக்கும் ஸ்பைடர் மேன் படத்தின் 4வது பாகத்தில், ஜெண்டயாவிற்கு பதிலாக புதிதாக ஒரு கதாநாயகியை களமிறக்க இருக்கின்றனராம்.
அந்த நாயகியின் பெர்யர் சேடி சிங்க். 22 வயதாகும் இவர், வளர்ந்து வரும் ஹாலிவுட் நாயகியாக இருக்கிறார்.
ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஸ்பைடர் மேன் படத்தின் புது ஹீரோயினாக மாறலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.