இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகர்!! ரஜினி, கமல் இல்லை..வேறு யார்?
![Tamil Actor Tamil Actor](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2024/09/28/436878-8.jpg?im=FitAndFill=(500,286))
சமீபத்தில், இந்திய அளவில் அதிக ரசிகர்கள் கூட்டம் கொண்ட நடிகர்கள் குறித்த ஆய்வு நடைப்பெற்றது. அதில், தமிழ் நடிகர் ஒருவர்தான் டாப்பில் இருக்கிறாராம்.
![Tamil Actor Tamil Actor](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2024/09/28/436877-7.jpg?im=FitAndFill=(500,286))
இந்த நடிகர், இதுவரை தமிழ் படங்களில் மட்டும்தான் நடித்திருக்கிறார். இந்தியில் ஒரே ஒரு முறை மட்டும் காமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
![Tamil Actor Tamil Actor](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2024/09/28/436876-6.jpg?im=FitAndFill=(500,286))
இவருக்கு தமிழ் நாட்டில் மட்டுமன்றி, உலகளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.
அவர் யாருமில்லை, நடிகர் விஜய்தான். சமீபத்தில் கோட் படம் மூலம் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த இவர் அடுத்து தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
விஜய், இந்திய அளவில் அதிக ரசிகர் கூட்டத்தை கொண்டிருக்கிறார் என்பது குறித்த தரவுகள், பிற ஊடகங்களில் தகவல் அடிப்படையில் இங்கு எழுதப்பட்டுள்ளது. இது குறித்து ZEE MEDIA எந்த உறுதியான தகவலையும் அளிக்கவில்லை.
நடிகர் விஜய், இன்னும் சில மாதங்களில் திரையுலகில் இருந்து மொத்தமாக விலகி முழு நேரமாக அரசியலில் இறங்க இருக்கிறார்.
விஜய், சினிமாவை விட்டு விலகுவதால் அவரது ரசிகர்கள் பெரும் வேதனை அடைந்திருக்கின்றனர். இருப்பினும், அவரது அரசியல் பயணத்திற்கும் ஆதரவு கொடுப்போம் என தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அளவில் அதிக ரசிகர்கள் கொண்ட நடிகர்களின் பட்டியலில், ரஜினி, கமல், அஜித் ஆகியோர் முதலில் இல்லாமல் விஜய் டாப்பில் இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது