இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தமிழ் நடிகை! பலருக்கு பிடித்தவர்..யார் தெரியுமா?
)
தமிழ் மக்கள் மத்தியில், டிஜிட்டல் பிரபலமாக வலம் வருபவர் ஷ்ருதிகா அர்ஜுன். இவர், குக் வித் கோமாளி சீசன் 3 மூலம் பிரபலம் ஆனார்.
)
மறைந்த மூத்த நடிகர், தேங்கா ஸ்ரீநிவாசனின் பேத்தியான இவர், இளம் வயதில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
)
இவர், முதன்முதலில் நடித்த படம் ஸ்ரீ. இந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதில் அவர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மாதவனுடன் நளதமயந்தி படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தித்திக்குதே படத்திலும் துணை கதாப்பாத்திரமாக வந்தார்.
ஒரு சில படங்களிலேயே நடித்து, திரையுலகை விட்டு விலகிய இவர், பின்னர் திரையுலகை விட்டு விலகினார். அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, செட்டில் ஆகிவிட்டார்.
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இவர் டைட்டில் வின்னர் ஆனார். இதையடுத்து இவருக்கு ரசிகர்கள் கூடினர். தனியாக சமையல் நிகழ்ச்சியையும் தொடங்கி, அதிலும் கொடிக்கட்டி பறந்து வருகிறார் ஷ்ருதிகா. இவர், இந்தி பிக்பாஸிற்குள் நுழையும், முதல் தென்னிந்திய தமிழ் பெண்ணாக இருக்கிறார்.
ஷ்ருதிகாவிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே, அவரது கண்களும், வேடிக்கையான பேச்சும்தான். எவ்வளவு மணி நேரம் விட்டாலும், விடாமல் பேசிக்கொண்டே இருக்கும் பர்சனாலிட்டி இவர். இதனாலேயே இவருக்கு இந்தியாவின் பெரிய மேடையான இந்தி பிக்பாஸ் கிடைத்திருக்கிறது.
தமிழ்-இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்தி பிக்பாஸை, சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இதில், கலந்து கொண்ட ஷ்ருதிகா அவரை “வணக்கம்” தெரிவிக்க சொல்லி மகிழ்ச்சி அடைந்தார். இந்தி சின்னத்திரை உலகிற்குள் நுழைந்துள்ள ஷ்ருதிகாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.