விஜயகாந்த் முதல் திரிஷா வரை... தி கோட் படத்தில் கலக்கல்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கு பின் இன்று வெளியாகியுள்ளது.
லைலா, மோகன், ஸ்னேகா, ஜெயராம், பிரசாந்த், பிரபு தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் தி கோட் படத்தில் நடித்துள்ளனர்.
கோட் படத்தை பார்த்த ரசிகர்கள் பாஸிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகின்றன.
கோட் படத்தின் முதல் சீனிலேயே விஜயகாந்த் வரும் காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது. கேப்டன் விஜயகாந்த் கோட் சூட்டில் வரும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ கேரக்டர் மிகப்பெரிய உற்சாகத்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளது. படத்தில் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் விஜய் கொடுப்பதாக காட்சிகள் அமைந்துள்ளன.
'மட்ட' பாடலில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா வெறித்தனமாக குத்தாட்டம் போட்டுள்ளதாக ஸ்க்ரீன் ஷாட்கள் வைரலாகி வருகிறது.