இனி ஆன்லைனிலேயே மேரேஜ் ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம்! தமிழ அரசின் புது திட்டம்..
திருமணம் செய்து கொள்பவர்கள், சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்வர். இதற்காக அவர்கள் அங்கு காத்திருக்கும் சூழல் உருவாகும்.
சார்ப்பதிவாளர் அலுவகங்களில் திருமணத்தை பதிவு செய்ய, ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், ஒரு சில இடங்களில் இதற்காக மக்களை ஏமாற்றி ஒரு சிலர் ரூ.5,000 வசூலிப்பதாக கூறப்படுகிறது.
தற்போதுள்ள அரசு நடைமுறையால் பலரும் திருமணங்களை பதிவு செய்ய வருவதில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது.
நடைமுறை சிக்கல்களை தவிர்த்து, திருமணப் பதிவு முறையை எளிதாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு, ஆன்லைனில் திருமணத்தை பத்திரப்பதிவு செய்யும் முறையை அமல்படுத்த இருக்கிறது.
இந்த முறை மூலம், மக்களே தங்களின் திருமணத்தை நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். இது, பலரது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட இருக்கிறது.
இணையதளம் அல்லது மொபைல்போன் வாயிலாக திருமணப் பதிவை செய்து கொள்ள விரைவில் வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.