‘கடவுளே அஜித்தே..’ விடாமுயற்சி டீசருக்கு ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?
விடாமுயற்சி திரைப்படத்தின் வேலைகள், கடந்த 2 வருடங்களாக நடைப்பெற்று வருகிறது. அஜித்குமார் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தை, மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார்.
படத்தின் போஸ்டர் வெளியானதற்கு பிறகு, ரசிகர்களின் ஆர்வத்தை ஈடு செய்யும் வகையில் வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதையடுத்து, விடாமுயற்சி பட அப்டேட்டை பார்த்து காத்திருந்தவர்களின் தாகத்தை தணிக்கும் வகையில், அப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.
இந்த டீசரில், அஜித் சில காட்சிகளில் வெள்ளை முடி இல்லாமல், கருப்பு டை அடித்து, இளமை தோற்றத்தில் இருக்கிறார். அர்ஜுன், ரெஜினா நெகடிவ் கதாப்பாத்திரங்களில் நடிக்க, த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
விடாமுயற்சி திரைப்படத்தின் டீசரில், கொஞ்சம் “பிரேக்கிங் பேட்” வெப் தொடரின் வாடை அடிப்பதாக, சில ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இதற்கு அவர், “கடவுளே அஜித்தே” என்ற வார்த்தையை போலவே, பின்னணி இசையாக அமைத்திருப்பதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர்.
இந்த டீசரில், ஹாலிவுட் அளவிற்கு காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.
விடாமுயற்சி படத்தை, அடுத்த வருட பொங்கலுக்கு தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர்.