ஒரு வழியாக வெளியாகும் ‘மத கஜ ராஜா’ படம்!! எப்போ தெரியுமா?
கோலிவுட்டில், நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் படம், மத கஜ ராஜா. இந்த படத்தின் ப்ரொடக்ஷன் பணிகள் 2012ஆம் ஆண்டில் தொடங்கி 2013ஆம் ஆண்டில் முடிவடைந்தது.
மத கஜ ராஜா படத்தினை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்திருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பே வெளியாக வேண்டிய இந்த படம் இப்போது வரை வெளியிடப்படாமல் இருப்பதற்கு காரணம், அந்த தயாரிப்பு நிறுவனம் நிதி ரீதியாக சில சிரமங்களை சந்தித்து வருவதால்தான் எனக்கூறப்படுகிறது.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்போது ஹீரோவாக மட்டும் நடித்து வரும் சந்தானம், மத கஜ ராஜா படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை வெளியிட தானும் விஷாலும் எவ்வளவோ முயற்சி செய்ததாக சுந்தர்.சி ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார்.
தற்போது ஒரு வழியாக இந்த படம் வெளியாகவுள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை அடுத்து இப்படம் வெளியாக இருப்பதாக சந்தானமும் விஷாலும் பதிவை வெளியிட்டிருக்கின்றனர்.
தற்போது பொங்கல் ரேஸில் மத கஜ ராஜா படம் இணைந்துள்ள செய்தியை கேட்டதிலிருந்து ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.