விஜய் சேதுபதியின் மகளை பார்த்துள்ளீர்களா..? செம மாடர்னா இருக்காரே..!

Wed, 17 Jul 2024-11:44 am,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. முக்கிய ஹீரோக்கள் நடித்த படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்த இவர், இன்று பாலிவுட் அளவிற்கு கலக்கும் நடிகராக இருக்கிறார். 

விஜய் சேதுபதி, திரையுலகிற்கு வருவதற்கு முன்பு சென்னையில் சில தனியார் நிறுவனங்களில் வேலைபார்த்திருக்கிறார். அதன் பின்பு துபாய்க்கு சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் சில ஆண்டுகள் கணக்காளராக இருந்தார். 

துணை கதாப்பாத்திரங்களில் நடித்து, கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த இவருக்கு முதலில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்த படம் தென்மேற்கு பருவக்காற்று. இந்த படம், தேசிய விருதினை வென்றது. 

விஜய் சேதுபதி, திரையுலகிற்கு வருவதற்கு முன்னரே திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி ஜெஸ்ஸி சேதுபதி, இவரைவிட 1 வயது மூத்தவர். விஜய் சேதுபதிக்கு சூர்யா மற்றும் ஸ்ரீஜா என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் சூர்யா தனது தந்தையுடன் நானும் ரவுடி தான் படத்திலும் சிந்துபாத், விடுதலை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 

சூர்யா சேதுபதி, ஃபீனிக்ஸ் எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது “அப்பா வேற...நான் வேற..” என இவர் பேசியது பெரும் வைரலானது. அதிலிருந்து நிருபர்கள் மத்தியில் பேசுவதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறார். 

விஜய் சேதுபதி, என்னதான் பட ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் தனது குடும்ப பொறுப்புகளில் இருந்து தவறாதவராக இருக்கிறார். இவர், தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா சேதுபதியும் ‘முகிழ்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருக்கிறார். இந்த படம் பெரிதும் பிரபலமாகததால் பெரும்பாலானோருக்கு இவரை தெரியாது. 

விஜய் சேதுபதியின் மகளது தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், இவர் பார்ப்பதற்கு மிகவும் மாடர்னாக இருப்பதாக கூறி வருகின்றனர்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link