தேவயானியை அப்படியே உரித்து வைத்திருக்கும் அவரது 2 மகள்கள்!! வைரலாகும் போட்டோஸ்..
தமிழ் திரையுலகின் முக்கிய நடிகையாக திகழ்ந்தவர் தேவையானி. நம்மில் பெரும்பாலானோர், இவரை சூர்ய வம்சம் தேவையானி என்று அழைப்போம். 22-20 ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகையாக இருந்த இவர், இன்று சீரியல்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள படங்களில் நடித்த தேவையானி, 2001ஆம் ஆண்டு இயக்குநர் ராஜகுமரனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
தேவையானி, திரையுலகில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து இப்போது ஒரு சில படங்களில் நடித்து கம்-பேக் கொடுத்து வருகிறார்.
தேவையானியின் இரண்டு மகளில், இனியா மூத்தவர், பிரியங்கா இளையவர். இதில் முதலாமவர் கல்லூரியில் பயின்று வருவதாக கூறப்படுகிறது.
தேவையானியின் மகள், சில மாதங்களுக்கு முன்பு தனது தாய் தந்தையருடன் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டனர். அதிலிருந்து வைரலாகி வருகின்றனர்.
தேவையானி, சமீபத்தில் தனது இளைய மகளுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேவையானி, தனது மகள்களை சிறப்பாக வளர்த்துள்ளதாகவும், இருவரும் பார்ப்பதற்கு அவரது சாயலில் இருப்பதாகவும் சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.