‘காதல்’ சந்தியாவின் மகளை பார்த்துள்ளீர்களா? அப்படியே அம்மாவின் முகம்-வைரல் போட்டோஸ்..
)
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்தவர் சந்தியா.
)
சந்தியாவின் உண்மையான பெயர், ரேவதி. இவர் முதன் முதலில் தமிழில் நடித்த படம், காதல்.
)
காதல் படத்தில் கதாநாயகியாக இருந்தவர், சந்தியா. இவர், கேரளாவை சேர்ந்தவர்.
சந்தியா, மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் தமிழில் நடித்த டிஷ்யூம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவெற்பை பெற்ற ஒன்றாகும்.
சந்தியா, கூடல் நகர், கண்ணாமூச்சு ஏனடா, வல்லவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் கவனம் ஈர்க்கும் நடிகையாக இருந்தார்.
நமிதா, கனிகா உள்ளிட்ட சில நடிகைகள் இவருக்கு நெருங்கிய தோழிகள் ஆவர்.
சந்தியா, கடைசியாக தமிழில் நடித்த படம், ‘யா யா’. இந்த படத்தில் அவர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கட் சந்திரசேகரை 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தையுடன் சந்தியா இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் அவர் பார்ப்பதற்கு அப்படியே சந்தியா போல இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.