திருமணமாகி 1 வாரம் கூட ஆகல..கழுத்தில் மஞ்சள் தாலியுடன் பட விழாவில் கீர்த்தி சுரேஷ்!
தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷிற்கு, கடந்த 12ஆம் தேதி திருமணம் நடைப்பெற்றது. இவர், தனது பல வருட காதலரான ஆண்டனி தட்டிலை மணம் முடித்தார்.
இந்த திருமண விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டாரா இல்லையா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இறுதியில், அந்த சந்தேகங்களை தீர்க்கும் வண்ணம் கீர்த்தி சில போட்டோக்களை நேற்று வெளியிட்டார். அதில் விஜய் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.
கீர்த்தியின் திருமண நிகழ்வில் விஜய் மட்டுமன்றி, த்ரிஷா, அட்லீ, பிரியா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், விஜய்யும் த்ரிஷாவும் ஒரே விமானத்தில் வந்ததாக வேறு கூறப்பட்டது.
கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார். இது, தெறி படத்தின் இந்தி ரீ-மேக் ஆகும். இதில் அவர் சமந்தா கேரக்டரில் நடித்திருக்கிறார்.
பேபி ஜான் படம், கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து, இப்படத்தின் ப்ரமோஷன் விழா நேற்று நடைப்பெற்றது.
திருமணமாகி இன்னும் 1 வாரம் கூட முடிந்திராத நிலையில், கழுத்தில் மஞ்சள்.தாலியுடன் கீர்த்தி இந்த விழாவில் கலந்து கொண்டார். இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷிற்கு பேபி ஜான் படம் முதல் இந்தி படமாகும். இதற்கு பிறகு அவருக்கு இன்னும் நிறைய இந்தி பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.