Ponniyin Selvan Pic`s: பொன்னியின் செல்வன் படத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
![பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ம் தேதி ரீலிஸ்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/03/02/214022-ponniyin-selvan3.jpg?im=FitAndFill=(500,286))
இறுதியாக காத்திருப்பு முடிந்தது! மணிரத்னத்தின் கனவுப்படங்களில் ஒன்றாகக் கூறப்படும் பொன்னியின் செல்வன் இறுதியாக செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
![Actor Karthi in Ponniyin Selvan](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/03/02/214021-ponniyin-selvan.jpg?im=FitAndFill=(500,286))
பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார், ரஹ்மான் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி உட்பட ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர்.
![Aishwarya Rai Bachchan in Ponniyin Selvan](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/03/02/214020-ponniyin-selvan4.jpg?im=FitAndFill=(500,286))
கல்கியின் பகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய இயக்குனர்களின் ஒருவரான மணிரத்னம் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.
சோழப் பேரரசின் பொற்காலம் துவங்கும் இந்தக் கால கட்டத்தைத் திரைக்குக் கொண்டு வர ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து வருகின்றனர். பல பெரிய நடிகர்களை ஒரே படத்தில் காணும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே மிகவும் அதிகமாக உள்ளது.