ரிஷப் செட்டி இயக்கி நடிக்கும் காந்தாரா:அத்தியாயம் 1 ரீல்ஸ் தேதி வெளியீடு!
பிரபல கன்னட மொழிப் படங்களில் ஒன்றான “காந்தாரா: அத்தியாயம் 1”அக்டோபர் 2 தேதி 2025 அன்று வெளியிடப்படத் திட்டமிட்டுள்ளனர். அடுத்த பான்-இந்தியப் பிரம்மாண்ட படமாக ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து மீண்டும் ஒருமுறை உலகெங்கும் உள்ள பார்வையாளர்களை வெகுவாக கவர தயாராகி வருகிறது.
“காந்தாரா: அத்தியாயம் 1” இப்படத்திற்கு இயக்குநரும் மற்றும் நடிகரும் இரண்டையும் கண்களாகக் கொண்டு மாஸாக ரிஷப் செட்டி தீவிரமாக உழைத்து வருகிறார். ரிஷப் முன்னதாக உள்ள காந்தாரா படத்தினை பார்த்தால் அறிந்திருப்பீர்கள் நடிப்பில் நுழைந்து கதாபாத்திரத்தை சித்தரிக்கப்பட்டதுபோல் நடித்திருப்பார்.
கேரளாவிலிருந்து தோன்றிய பழமையான தற்காப்புக் கலை வடிவங்களில் ஒன்றான களரிபயட்டில் கடுமையான ரிஷப் செட்டி பயிற்சி பெற்றார். ரிஷப் தனது கதாபாத்திரத்தை உண்மையாகச் சித்தரிக்கக் கலையில் தேர்ச்சி பெறுவதற்கான அர்ப்பணிப்பை அதிகமாகக் கொடுத்துள்ளார்.
காந்தாரா: பாகம் ஒன்றில் மூர்ச்சடைய வைக்கும் காட்சிகள் கொங்கன் நாட்டுப்புற வாழ்வியல் மற்றும் கலை உள்ளிட்ட நாட்டுப்புற வாழ்க்கைகளைச் செழுமையை உலகிற்கு அறிமுகப்படுத்திய கதைகள் நிறைந்த உண்மை வாழ்க்கைகள்.
இந்திய எல்லைகளுக்கு அப்பால் உலகளாவிய ரசிகர்களை ஈர்த்து ப்ளாக்பஸ்டரில் வெற்றியாகி பார்வையாளர்களைக் கவர்ந்த ரிஷப் செட்டியின் இதயப்பூர்வமான நடிப்பின் இப்படம் மிக அழுத்தமான உண்மையாகச் சித்தரித்த படம்.
ரிஷ்ப் செட்டியின் காந்தாரா: அத்தியாயம் 1 படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்தநிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
கன்னட மொழியின் ஹோம்பாலே பிலிம்ஸ் மண்சார்ந்த சினியுலகில் பிரம்மாண்டமான பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம். புகழ்பெற்ற இந்நிறுவனம் தலைசிறந்த உலகளாவியக் காட்சியனுபவத்தை மீண்டும் ரசிகர்களுக்குக் கொடுக்க தயாராகிறது.
வீரம், கலாச்சாரம் மற்றும் மர்மம் நிறைந்த சகாப்தம் நிறைந்த ஆர்வத்தைத் தூண்டும் படமாக இப்படத்தினை படக்குழுவினர் உருவாக்கி வருகின்றனர். குந்தாப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கடம்பப் பேரரசை மீண்டும் உருவாக்கிக் கடந்த காலத்திற்கு ரசிகர்களை யோசிக்கத் துண்டும் மற்றும் மிகுந்த ஆர்வம் ஏற்படுத்தும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.