ஐபோன் டிசைனில் 6 ஆயிரம் ரூபாய் விலையில் புதிய மொபைல்.!

Sun, 04 Feb 2024-12:44 pm,

லாவா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் லாவா யுவா 3 என அழைக்கப்படுகிறது. 

 

இதில் 6.5 இன்ச் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, யுனிசாக் T606 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அதிகபட்சம் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

 

ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். கொண்டிருக்கும் லாவா யுவா 3 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 14 அப்கிரேடு மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு காலாண்டு வாக்கில் செக்யுரிட்டி அப்டேட்களை வழங்குவதாக லாவா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

 

லாவா யுவா 3 அம்சங்கள்: 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் யுனிசாக் T606 பிராசஸர், மாலி G 57 MC2 650MHz GPU, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 13, டூயல் சிம் ஸ்லாட், 13MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5MP செல்ஃபி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் சார்ஜிங்

 

லாவா யுவா 3 ஸ்மார்ட்போன் எக்லிப்ஸ் பிளாக், காஸ்மிக் லாவென்டர் மற்றும் கேலக்ஸி வைட் நிறங்களில் கிடைக்கிறது. 

 

இதன் 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 799 என்றும் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 299 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

 

விற்பனை அமேசான் வலைதளத்தில் பிப்ரவரி 7-ம் தேதி துவங்குகிறது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link