விருச்சிகத்தில் இணையும் புதன்-சுக்கிரன்; லக்ஷ்மிநாராயண யோகம் பெறும்‘3’ ராசிகள்!
சுக்கிரன் மற்றும் புதன் கிரகம் விருச்சிக ராசியில் இணைவதால், லக்ஷ்மி நாராயண யோகம் உண்டாகும். ஆடம்பர வாழ்வை தருபவரான சுக்கிரனும், செல்வம் மற்றும் வியாபாரத்தில் அபரிமிதமான பலன்களை அளிப்பவரான புதனும் இந்த 3 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை அளிக்கவுள்ளார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் - சுக்கிரன் இணைவினால் உருவாகும் லக்ஷ்மி நாராயண ராஜயோகம் நல்ல பலன்களைத் தரும். இந்த நேரத்தில் அவர்கள் பெரும் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். கிடைக்கவே கிடைக்காது என நினைத்த பணம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். முதலீட்டுக்கு நல்ல நேரம். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும்.
சுக்கிரன்-புதன் சஞ்சாரத்தால் உருவாகும் லக்ஷ்மி நாராயண ராஜயோகமும் மகர ராசியினருக்கு மிகவும் நன்மை பயக்கும். அவர்களின் வருமானத்தில் பெரும் உயர்வு ஏற்படும். பணியாளர்களின் சம்பளம் உயரலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பங்குச் சந்தை மற்றும் லாட்டரி மூலம் பணம் பெற வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் உங்கள் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றலாம்.
சுக்கிரன் மற்றும் புதன் இணைவதால் உருவாகும் லக்ஷ்மி நாராயண யுகம் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமானதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அடைந்து பெரும் முன்னேற்றம் அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும். நிதி ஆதாயம் காரணமாக, நிதி நிலைமை வலுவாக இருக்கும். புதிய வேலை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்பு. வீடு அல்லது வாகனம் வாங்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)