லியோ-2 படம் தயாராகுமா? லோகேஷ் கனகராஜ் கூறிய பதில் இதுதான்!
லியோ-2 படம் தயாராகுமா? லோகேஷ் கனகராஜ் கூறிய பதில் இதுதான்!
கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து, லியோ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.
லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாம் முறையாக லியோ படத்தில் கைக்கோர்த்தனர்.
லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அப்படத்திற்கு இரண்டாம் பாகம் வருமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
லியோ படத்தின் தயாரிப்பாளர் தனக்கு கொடுக்க இருக்கும் ஹெலிகாப்டருக்கு பெயிண்டிங் வேலை நடைப்பெற்று வருவதாகவும அது கைக்கு வந்தவுடன் லியோ 2 குறித்து பேசுவேன் என்றும் லோகேஷ் கூறியுள்ளார்.
லியோ படம் வெளியாவதற்கு முன்னர் அப்படக்குழுவினர் குறித்து பல தவறான தகவல்கள் பரவின.
லோகேஷ் கனகராஜ்ஜிற்க், லியோ தயாரிப்பாளர் எஸ்.எஸ். லலித்குமார் ஹெலிகாப்டர் கொடுக்க இருக்கிறார் என்பதும் அந்த தகவல்களுள் ஒன்று. இதை கேலி செய்யும் விதமாக லோகி இவ்வாறு பேசியிருக்கிறார்.