மர்மமான வடகொரிய அதிபரை போல், மர்மம் நிறைந்த வட கொரியா ஹோட்டல்..!!!

Sat, 07 Nov 2020-5:15 pm,

 இந்த வட கொரிய ஹோட்டலின் பெயர் யாங்காடோ ஹோட்டல். தலைநகர் பியோங்யாங்கில் உள்ள இந்த ஹோட்டல். இந்த ஹோட்டல் வட கொரியாவின் மிகப்பெரிய ஹோட்டல். இது வட கொரியாவில் உள்ள மிக உயரமான கட்டிடங்களில் ஒன்று. இது டேடோங் ஆற்றின் நடுவில் அமைந்துள்ள யாங்டக் தீவில் அமைந்துள்ளது.

47 மாடிகள் கொண்ட யாங்கடோ ஹோட்டலில் மொத்தம் 1000 அறைகள் உள்ளன. இதில் நான்கு உணவகங்கள், ஒரு மசாஜ் பார்லர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஹோட்டல் வட கொரியாவின் முதல் சொகுசு ஹோட்டல், இதில் உள்ள அறைகளின் வாடகை சுமார் 25 ஆயிரம் ரூபாய். இது ஆறு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கட்டுமானம் 1986 ஆம் ஆண்டில் தொடங்கி 1992 இல் நிறைவடைந்தது. இந்த கட்டிடம், பிரான்சின் காம்பனான் பெர்னார்ட் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டது.  1996 இல் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.

இந்த ஹோட்டலின் லிப்டில் ஐந்தாவது மாடிக்கான பட்டன் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது மீதமுள்ள எந்த தளங்களுக்கும் யாரும் செல்லலாம், ஆனால் ஐந்தாவது மாடிக்கு செல்ல முடியாது. இதற்காக வட கொரியா மிகவும் கடுமையான விதிகளை உருவாக்கியுள்ளது. ஒரு வெளிநாட்டவர் ஐந்தாவது மாடிக்குச் சென்றால், அவர் இங்குள்ள சிறையில் என்றென்றும் அடைபட்டு கிடக்க வேண்டும்.

2016 ஆம் ஆண்டில், ஓட்டோ வார்ம்பியர் என்ற அமெரிக்க மாணவர் யாங்கடோ ஹோட்டலின் ஐந்தாவது மாடிக்குச் சென்றார். அதன் பின்னர் அவர் ஹோட்டலின் ஐந்தாவது மாடியில் ஒரு சுவரொட்டியை கிழித்ததாகக் கூறி வட கொரிய போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, ஓட்டோ வார்ம்பியர் மீது வழக்குத் தொடரப்பட்டு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணையின் போது அவர் நிறைய சித்திரவதை செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டாலும், அமெரிக்காவுக்குத் திரும்பிய பின்னர் கோமா நிலைக்குச் சென்று, ஜூன் 2017 இல் இறந்தார்.

ஹோட்டலில் தங்கியிருந்த மற்றொரு அமெரிக்கர் ஹோட்டல் குறித்து சில தகவல்களை கூறியுள்ளார். யங்ககாடோ ஹோட்டலின் ஐந்தாவது மாடியில் ஒரு பதுங்கு குழி போல சிறிய அறைகள் கட்டப்பட்டுள்ளன, பெரும்பாலான அறைகள் பூட்டப்பட்டுள்ளன என அவர் கூறுகிறார். அறையின் சுவர்களில் உள்ள ஓவியங்கள் அமெரிக்க எதிர்ப்பு மற்றும் ஜப்பான் எதிர்ப்பு அடிப்படையிலான ஓவொயங்கள் என்கிறார்.   வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல் படங்கள் உள்ளதாகவும் கூறுகிறார். அங்கு வைக்கப்பட்ட  ஓவியங்களில், "அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அனைத்தும் எங்கள் எதிரி. நாங்கள் அமெரிக்காவை ஆயிரம் மடங்கு பழிவாங்குவோம்" என்று கூறப்படுகிறது.

மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், யாங்காடோ ஹோட்டலில் ஐந்தாவது மாடியே இல்லை என்று வட கொரியா அரசு நம்புகிறது. இப்போது அங்கு சென்றவர்களின் கூற்றும் வட கொரியா அரசாங்கத்தின் கூற்றும் மாறுபட்டு இருப்பதால், ஒரே மர்மமாக உள்ளது. குழப்பம் அதிகரிக்கிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link