விஜய் அன்று ஆதரவு - இன்று எதிரி ! தமிழ்நாட்டு மக்கள் யார் வலையில் ?

Mon, 28 Oct 2024-6:41 pm,

கூத்தாடியின் தேவை நிறைவேறி எதிரியான தருணம்: விஜய் சினிமாவில் நடிக்க வந்தபோது திராவிடக் குடும்பத்தை மனம் நெகிழ்ந்து வாழ்த்தினார். விஜய் வாய் வழிய திராவிட குடும்பம் என்று பெருமைப்படுத்தி பேசியது நினைவில்லையா? அன்றே அவர்களை எதிரியாக நினைத்திருக்கலாமே? ஏன் அன்று விஜய்யிக்கு தேவை ஏற்பட்டதா? இன்று தேவை நிறைவேறியதால் திராவிடத்தை எதிரியாக மாற்றிவிட்டாரா? மேலும் கூத்தாடியாக இருந்தபோது உதவி தேவைப்பட்டது தற்போது கூத்தாடி முடித்ததும் விஜய்யிக்கு தேவை முடிந்து தற்போது எதிரியானதா ? என்று பலக் கேள்விகள் மக்களிடையே எழுந்தது.

சினிமாவில் நடித்தபோது திராவிடத்தின் உதவி இன்று அரசியலுக்கு எதிரி : காரியம் ஆனாதும் கழவிட்டு எதிரியாகும் குடும்பம் தமிழக வெற்றி கழகத்தின் உண்மையான தலைவருக்கு அழகா? பெண்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று தற்போதுதான் விஜய்யிக்கு புரிகிறாதா? இதற்கு முன் பெண் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று  விஜய் விரும்பவில்லையா? என்று மக்கள் மோசமாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மேடையில் திராவிடம் குறித்துப் பேசிய விஜய்: விஜய் வார்த்தைக்கு வார்த்தை திராவிடம் குடும்பத்தின் பெருமையை  மேடையில் பேசியதெல்லாம் வெறும் சும்மா பேச்சுதான் என்று மக்கள் கருத்துக் கூற. ஒருப்புறம் மாநாட்டில் தமிழ்நாட்டை சுரண்டிக் கொண்டிருக்கும் திராவிடக் குடும்பம் எதிரி என்று மறுப்புறம் பேச. விஜய் தெளிவான மற்றும் உண்மையான கட்சி தலைவனா? என்று மக்கள் பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

 

உண்மையான தலைவர் யார்? : ஒரு உண்மையான தலைவருக்கு இருக்கும் எந்த பொருத்தமும் விஜய்யிக்கு இல்லை. விஜய் தனது முதல் மாநாட்டிலே தோற்றுவிட்டார் என மக்கள் மோசமான மனநிலையில் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் நாற்காலி ஆசை: விஜய்யிக்கு முதல்வர் நாற்காலி மேல் சமீப ஆசை வந்துவிட்டது. சாதி, மதம், பாலினம் போன்றவை ஏதும் வேறுபாடு இல்லாமல் இருப்பதே தமிழக வெற்றி கழகத்தின் நோக்கம் என்று தற்போதுதான் விஜய்யின் நினைவுக்கு வருகிறதா? என்று மக்கள் பலக் கேள்விகள் எழுப்படுகின்றனர்.

இத்தனை வருடம் தொலைந்து காணாமல் போன விஜய்: தமிழ்நாட்டில் எத்தனை வருடத்தில் வெள்ளம், நிலச்சரிவு, புயல், பெண் கொள்ளை, வன்கொடுமை, குழந்தை கடத்தல், சிறார் வன்கொடுமை மற்றும் அனிதா போன்று நீட் தேர்வினால் உயிர் மாய்த்துகொண்ட பல பெண்கள் இதையெல்லாம் விஜய் இத்தனை வருடங்கள் பார்த்துகொண்டுதானே இருந்தார். ஏதாவது முன் வந்து போராடினாரா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

உண்மையான அரசியல் தலைவர் நோக்கம்: ஒரு உண்மையான அரசியல் தலைவர் நேரம் பார்க்காமல், நாள் பார்க்காமல் மக்களுக்காக முன் வந்து மக்கள் பணி செய்து வருவது உண்மை தலைவனுக்கு சிறந்த பண்பு என்று மக்கள் பல விதத்தில் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

மக்களே உஷார்: சினிமாவில் சேர்த்து வைத்த ரசிகர்களை வைத்து அரசியலில் நுழைந்து விட்டு அந்த ரசிகர்கள் வாக்கு அளிப்பார்கள் என்று துணிச்சலான நம்பிக்கை விஜய்யிக்கு உள்ளது. ஆனால் மக்கள் புத்திசாலித்தனமாக இருந்தால் இந்த ஜனநாயகத்தை  உயர்த்தலாம். ரசிகர்கள் விஜய் வலையில் சிக்கியுள்ளார்களா? அல்லது மக்கள் வலையில் விஜய் சிக்கியுள்ளாரா? மக்கள் தெளிவான நோக்கில் செயல்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link