ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை `டக்` அவுட் ஆன பேட்ஸ்மேன்கள் பட்டியல்!

Mon, 21 Sep 2020-9:35 pm,

இந்த முன்னாள் இலங்கை கேப்டன் 445 போட்டிகளில் 433 இன்னிங்ஸ்களில் 34 முறை ரன் எடுக்காமல் டக் அவுட் ஆகி திரும்பி வந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் "பூஜ்ஜிய" ரன்னில் அதிகமுறை வெளியேறிய பட்டியலில் சனத் ஜயசூரியா (Sanath Jayasuriya) உள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் பேட்டிங்கில் பல அதிரடிகளை காட்டிய சாகித் அஃபிரிடி (Shahid Afridi) 398 போட்டிகளில் 30 முறை டக் அவுட்டாகி, பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் "மாஸ்டர் ஆஃப் ஸ்விங்" வசீம் அக்ரம் (Waseem Akram) 356 ஒருநாள் போட்டிகளில் 280 இன்னிங்ஸில் விளையாடி 28 முறை 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.

இலங்கையின் மிக முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவரான மகேல ஜயவர்தன (Mahela Jayawardene) 448 போட்டிகளில் 418 இன்னிங்ஸ்களில் 28 முறை டக் அவுட் ஆனார். 

யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க (Lasith Malinga) மோசமான பேட்டிங் சாதனை படைத்துள்ளார். 226 போட்டிகளில் 119 இன்னிங்ஸ்களில் 26 முறை பூஜ்ஜியத்தில் அவுட் ஆகியுள்ளார்.

முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan) அதிக எண்ணிக்கையிலான விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஆனால் இவரும் அதிக முறை பூஜ்ஜிய ரன்னுடன் வெளியறியுள்ளார். முரளிதரன் 350 போட்டிகளில் 162 இன்னிங்ஸ்களில் 25 முறை டக் அவுட் ஆனார்.

301 ஒருநாள் போட்டிகளில் 294 இன்னிங்ஸில் ஆடியுள்ள கிறிஸ் கெயில் (Chris Gayle) 25 முறை ரன் எடுக்காமல் பூஜ்ஜியத்துடன் வெளியேறினார். இந்த இடது கை பேட்ஸ்மேன் பல சாதனைகளை முறியடித்துள்ளார். ஆனால் "டக்" பட்டியலில் முதல் 10 இடங்களில் இவரும் இடம் பிடித்துள்ளார்.

இலங்கையின் சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரரான சமிந்த வாஸ் (Chaminda Vaas) 322 போட்டிகளில் 220 இன்னிங்ஸ்களில் 25 முறை டக் அவுட்.

இலங்கை அணியின் யின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுமான ருமேஸ் களுவித்தாரன (Romesh Kaluwitharana) ஒருநாள் கிரிக்கெட் பயணத்தில் 189 போட்டிகளில் 181 இன்னிங்ஸ்களில் 24 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

நியூசிலாந்து முன்னாள் கேப்டனும் சிறந்த சுழற்பந்து வீச்சாளருமான. 295 போட்டிகளில் 187 இன்னிங்ஸ்களில் 23 முறை டேனியல் வெட்டோரி (Daniel Vettori) ஆட்டமிழந்தார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link