அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகளின் பட்டியல் இதோ..!
இதுவரை நடந்த 9 எனிசன்களில் இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் இரண்டு முறையும், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் டி20 உலக்கோப்பையை வென்றுள்ளன.
இதில் ஒவ்வொரு குரூப்பிலும் வெற்றி பெறும் டாப் 2 அணிகளின் அடிப்படையில் குரூப் 8 சுற்று இரண்டு குழுக்களாக நடக்கும். இதில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப்போட்டுக்கு தகுதி பெறும்.
இதில் வெற்றி பெறும் அணிகள் அடுத்த சாம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாடும். இந்நிலையில், அந்த உலகக்கோப்பை போட்டி இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ளது. இதில் நேரடியாக தகுதி பெற்றுள்ள அணிகளின் பட்டியலை பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டில் போட்டியை நடத்தும் நாடுகளாக இலங்கையும் இந்தியாவும் உள்ளன. இந்த இரு அணிகளை தவிர நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 தகுதிச் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. தவிர, அமெரிக்காவும் 2026க்கான டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளது. அந்த அணி முதல் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர்-8க்கு முன்னேறினார்.
சூப்பர்-8 இல் ஒரு இடத்தைத் தவறவிட்ட போதிலும், நியூசிலாந்து (6வது) மற்றும் அயர்லாந்து (11வது) ஆகியவற்றுடன் டி20ஐ தரவரிசையில் 7வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அடுத்த சீசனுக்கான இடத்தைப் பிடித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு டி20 உலக க்கோப்பையில் விளையாட இருக்கும் எஞ்சிய எட்டு அணிகள் தகுதி சுற்று போட்டிகள் மூலம் தீர்மானிக்கப்படும், இது 2024 ஆம் ஆண்டின் தகுதிச் சுற்று போட்டிகளைப் போலவே இருக்கும்.
இதுவரை நடந்த 9 எனிசன்களில் இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் இரண்டு முறையும், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் டி20 உலக்கோப்பையை வென்றுள்ளன.