ரஜினியின் கூலி படத்திற்கு 60 கோடி சம்பளம் வாங்கியுள்ள லோகேஷ் கனகராஜ்!
5 படங்கள் மட்டுமே இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார். விக்ரம், லியோ என தொடர்ந்து மாஸ் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
லியோ உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் என்ற ஒன்றை ஆரம்பித்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறார்.
லியோ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியை வைத்து கூலி என்ற படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் டீஸர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரஜினியின் கூலி படத்தை இயக்க லோகேஷ் 60 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு, லியோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் ரூ. 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் உள்ளார். அனிருத் இசையமைக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.