Longest Hair: நீள முடி பெண்கள்! ஏழடி தலைமுடி இந்த கிராமத்தில சாதாரணம்

Sun, 03 Apr 2022-10:15 pm,

World’s Longest Hair Village தலைமுடியே தலைவிதியை நிர்ணயிக்கிறது என்று நம்பும் மக்களையும் பார்க்கிறோம். தலைமுடி விஷயத்தை தலையாயதாக பார்க்கும் பெண்கள், முடி வளர்வதற்காக பல அழகு குறிப்புகளை பின்பற்றுகின்றனர். சீனாவின் ஹுவாங்லுவோ கிராமத்த்தில் பெண்களின் தலைமுடி அவர்களின் உயரத்தை விட நீளமாக இருக்கும்.  அதற்குக் காரணம் என்ன தெரியுமா?

தலைமுடியை அழகுபடுத்த ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழித்தாலும் முடி வளரவில்லை என்று பெருமூச்சு விடுபவர்களே அதிகம். ஆனால், கிராமத்தில் இருக்கும் அனைத்து பெண்களின் தலைமுடியும் மிக நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும் ஸ்பெஷல் கிராமம் இது…

தென் சீனாவில் அமைந்துள்ள Huangluo கிராமம் Guilin நகரத்திலிருந்து 2 மணிநேரம் பயணத் தொலைவில் தொலைவில் அமைந்துள்ளது. இது உலகின் மிக நீளமான முடி கொண்ட பெண்கள் வசிக்கும் கிராமமாக கருதப்படுகிறது. இங்குள்ள பெண்களின் தலைமுடி பொதுவாக 5 அடி முதல் 7 அடி வரை நீளமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் இங்குள்ள பெண்களின் தலைமுடி 1 கிலோ வரை கனமாக இருப்பதுதான் ஆச்சரியமான விஷயம். யாவ் பெண்கள் என்று பிரபலமாக அறியப்படும் இந்த பெண்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது, இதன் காரணமாக இங்குள்ள பெண்கள் ஒவ்வொரு மாதமும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் முடி வெட்ட மாட்டார்கள்.

இங்குள்ள பெண்கள் தங்கள் முடி என்பது தங்களுக்கும் மூதாதையர்களுக்கும் இடையிலான தொடர்புக்கான ஊடகம் என்று நம்புவதால் அவர்கள் தங்கள் தலைமுடியை வெட்டாமல் முன்னோர்களை மகிழ்விக்கிறார்கள்

சீனா டிஸ்கவரி.காமில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, அதன் முடி காரணமாக, இந்த கிராமம் நீண்ட காலத்திற்கு முன்பே ஒரு தனித்துவமான சாதனையை படைத்துள்ளது. இங்கு திருமணமாகாத பெண்கள் தாவணியால் தலைமுடியைக் கட்டுகிறார்கள்,

திருமணமான பெண்கள் தலையின் முன்புறத்தில் பெரிய கொண்டையை போடுகிறார்கள்.  இந்த கிராமத்து பெண்களின் நடனமும் மிகவும் பிரபலமானது, அதனால்தான் அவர்களின் கலாச்சாரத்தைப் பார்க்க மக்கள் வெகு தொலைவில் இருந்து வருகிறார்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link