சோமாவதி அமாவாசையன்று சிவனின் தரிசனத்திற்கான பக்தி உலா...
சிவனின் வாகனமான நந்திதேவரை வணங்கிய பிறகு தானே சிவபெருமனை தரிசிக்க முடியும்? இதோ பிரம்மாண்டமான நந்தி ஆதியும் அந்தமுமாய் விரிந்து நிற்கும் பெருமானை தரிசிக்க அனுமதி கொடுத்துவிட்டார்...
இமயமலையில் புனித அமர்நாத் குகையில் தானாகவே உருவாகி, தேய்ந்து வளர்ந்து உருமாறும் இயற்கையான பனிலிங்கம்.... பார்க்கப் பார்க்க பரவசம் தரும் பனிலிங்கத்தை பார்த்து பரவசம் கொள்வோம்...
மிகவும் பழமையான காசி விஸ்வநாதர் ஆலயத்தை தொழுது வாழ்வில் நிம்மதி பெறுவோம்... நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க...
ராமேஸ்வரத்தில், ராமநாதரை ராமரே பூசித்ததால் அந்த கோபுர தரிசனம் கண்டாலே கோடி புண்ணியம் உண்டாகும்....
ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் உள்ள அச்சல்கர் மகாதேவ் ஆலயத்தில் சிவபெருமானின் கட்டைவிரல் வணங்கப்படுகிறது...
உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச் சமயங்களும் இல்லை
பக்தர்களின் மனக்கவலைகளை அகற்ற இமயமலையின் உச்சியில் அமர்ந்து அருள் பாலிக்கும் சிவபெருமான் கேதங்களை அறுக்கும் கேதார்நாத்...
திருவண்ணாமலையில் ஜோதியாய் இருந்து ஒளி கொடுக்கும் அருணாச்சலேஸ்வரனை சரணடைந்து அருள் பெறுவோம்...
வாயுத்தலம். தட்சிண கயிலாயம் என்று சிறப்பு பெற்ற திருகாளத்தியில் வீற்றிருக்கும் காளத்திநாதனை தரிசித்து காலத்தையும் வெல்லலாம்... கொரோனாவையும் தோற்கடிக்கலாம்...
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க... இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க...
தமிழகத்தின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்ட சிவாலயங்களில் ஒன்று சோழப் பேரரசர் ராஜராஜ சோழர் கட்டிய பிரகதீஸ்வரர் ஆலயம். பிரம்மாண்டமான கோவிலில் வீற்றிருக்கும் பிரகதீஸ்வரர்...
நந்திதேவரின் ஆசியுடன் பக்திப் பயணம் மேற்கொண்டீர்களா? இறையை வணங்கி, இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தால் என்றும் எங்கும் இன்பமே...