சூப்பரா வேலை செய்ய சூப்பர்ஃபுட்ஸ் இருக்கே! சைவப்பிரியர்களுக்கு ஊக்கமூட்டும் உணவுகள்
ஆரோக்கியமாக இருக்க ஒருவரின் உடலில் ஹீமோகுளோபின் அளவு சரியான அளவில் இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் குறையும்போது, அனீமியா எனப்படும் ரத்த சோகை ஏற்படுகிறது.
உடலுக்கு சோர்வைத் தரும் ரத்த சோகையை போக்க, சைவ உணவு உண்பவர்களுக்கு உகந்த உணவுகளை அறிந்து கொள்ளலாம். அறிந்துக் கொள்வதுடன் அதை தினசரி அடிப்படையில் கடைபிடித்தால் உற்சாகத்துடன் வாழலாம்
ரத்த சோகை நோய்க்கு, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளைத் தவிர, சில உணவுகள் உதவும். உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். இரும்புச்சத்து மற்றும் இரும்புச்சத்தை நமது உடல் கிரகிப்பதற்கு உதவும் சில சைவ சூப்பர் உணவுகள் இவை
சைவ உணவுகளில் இரும்புச்சத்து உணவுகள், காய்கறிகள் என பல இருந்தாலும், அவற்றில் சில உணவுகளில் மிக அதிகமான இரும்புச்சத்து உள்ளது
நெல்லிக்காயில் வைட்டமின் சி மிகவும் அதிகமாக உள்ளது. வைட்டமின் சி உடலில் இரும்புச் சத்தை கிரகிக்கும் தன்மையை அதிகரிக்கிறது இதை நம் உணவில் சேர்ப்பது இயற்கையாகவே நமது ஹீமோகுளோபின் அளவை உயர்த்த உதவும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
முளைவிட்ட தானியத்தில் இருக்கும் ஃபோலேட் என்னும் நுண்ணூட்டச்சத்து, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இதய நோய், ஆஸ்துமா, வயிற்றுப்புண், அழற்சி போன்ற நோய்களுக்கு எதிரான விளைவைக் கொண்டுள்ளது.
பீட்ரூட்டின் சிவப்பு நிறம் உண்மையில் இரும்புச் சத்தின் அளவைக் குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது வெளிப்படையாகத் தெரிந்தாலும், இரும்புச்சத்து மிக அதிகமாக உள்ள காய்கறிகளில் பீட்ரூட்டுக்கு முதலிடம் உண்டு. அவ்வப்போது, பீட்ரூட்டை சமைத்தோ, சாலாடாகவோ அல்லது ஜூஸாகவோ பருகுவது நமது ஹீமோகுளோபின் அளவை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தும். பீட்ரூட்டில் இரும்புச்சத்தைத் தவிர, ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன, இவை அனைத்தும் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
பேரீச்சம்பழம், சுவையானது மட்டுமல்ல, இரும்புச்சத்தும் நிறைந்த ஒரு உலர் பழம். இது செயற்கை சர்க்கரைக்கு மிகவும் ஆரோக்கியமான மாற்று என்று சுகாதார நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நான்கு சைவ சூப்பர்-ஃபுட்களும் ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதோடு, இரத்த சோகை போன்ற பல நோய்களை உணவின் மூலமே போக்க உதவுகின்றன